full screen background image

‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..!

‘கிளாப்’ படத்தில் தடகள வீரராக நடிக்கிறார் நடிகர் ஆதி..!

ஒரு சிறந்த தடகள வீரரான நடிகர் ஆதி, அறிமுக இயக்குநரான பிரித்வி ஆதித்யா இயக்கும் ‘கிளாப்’ படத்தில், தன் கதாபாத்திரத்திற்காக தன் உயிரையும் தந்து உழைத்து வருகிறார். 

பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிப்பில் ஜூன் 12-ம் தேதி ஒரு எளிய சடங்கு விழாவுடன் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் 20-ம் தேதி துவங்கியது.

ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை பி.பிரபா பிரேம், ஜி.மனோஜ் & ஜி. ஸ்ரீஹர்ஷா ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

clap-movie-poojai-4

நடிகர் ஆதி ஒரு பரிபூரணமான தடகள வீரராக பிரபலமடைந்தவர் என்றாலும், முன்னணி நடிகைகளாக நடிக்கும் அகான்ஷா சிங் மற்றும் கிரிஷா குரூப் ஆகியோரும் உடற் பயிற்சிகளில் கடுமையாக ஈடுபட்டிருக்கிறார்கள்.

நாசர் போன்ற மிகச் சிறந்த நட்சத்திர நடிகர்களும் இந்த படத்தில் இருக்கிறார்கள். அவர் இந்த படத்தில் வில்லனாக தோன்றுகிறார். முனீஷ்காந்த் கிட்டத்தட்ட மொத்த படத்திலும் தோன்றும் அளவுக்கு மிகவும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பிரகாஷ் ராஜ் சாருடைய கதாபாத்திரத்தை சுற்றித்தான் கதை நிகழும். மைம் கோபி மற்றும் இன்னும் சில பிரபல கலைஞர்களும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

clap-movie-poojai-3

விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஜீவி’ திரைப்படம் மற்றும் ‘மண்ணின் மைந்தர்கள்’ (ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோ) ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ராகுல் படத் தொகுப்பு செய்ய, வைரபாலன் கலை இயக்குநராக பணிபுரிகிறார்.

படம் குறித்து இயக்குநர் பிரித்வி ஆதித்யா கூறும்போது, “நாங்கள் இப்போது எங்கள் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறோம், தொடர்ந்து முழு வீச்சில் செல்லத் திட்டமிட்டுள்ளோம்.

அனைத்து கலைஞர்களும் தங்களது கதாபாத்திரங்களுக்கு தங்களை தாங்களே தயார்படுத்தி கொள்வதால், என் வேலை எளிதாக இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

clap-movie-poojai-1

ஆதி சார் அனைவரும் வியக்கும் வகையில் தன் உடலமைப்பை பராமரிப்பதில் நன்கு அறியப்பட்டவர். இயற்கையாகவே அவர் ஒரு உடற்பயிற்சி ஆர்வலர். அகான்ஷா சிங் ஒரு சிறந்த கலைஞர், இந்த கதாபாத்திரத்தில் அவரது மேஜிக்கை காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

கிரிஷா குரூப் கடந்த சில மாதங்களாக தன்னுடைய தடகள் விளையாட்டு வீராங்கணை பாத்திரத்திற்காக மிக கடினமான உழைத்து வருகிறார். ஒரு வேளை அவர் மேலும் பயிற்சி எடுக்க முடிவு செய்திருந்தால், இந்த படத்தை தவிர்த்து விட்டு, நேரடியாக ஒரு தடகள வீராங்கணையாக பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கலாம்…” என்றார்.

மிகுந்த உற்சாகத்துடன் படப்பிடிப்பு நடக்கும் தற்போதைய சூழ்நிலையை பற்றி கூறிய இயக்குநர், மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜாவின் இசையை நினைத்து மேலும் உற்சாகமடைகிறார்.

“ஒரு படத்தின் உணர்வுகள் எப்போதும் அவரின் இசை மூலம் சிறந்த முறையில் மேம்படும். எங்கள் திரைப்படமான ‘கிளாப்’ படத்தில் உணர்வுகள் மையமாக இருப்பதால், இசைஞானி இளையராஜா ஐயாவின் ஆத்மார்த்தமான இசையை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த படத்தில் 5 பாடல்கள் உண்டு…” என்றார்.

‘தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்’ என்ற உத்வேகம் அளிக்கும் டேக்லைன் உடன் இத்திரைப்படம் வெளியாகவுள்ளது.

படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள அழகான பகுதிகளில் படமாக்கப்படுகிறது.

Our Score