full screen background image

நடிகர் ஆதி-நடிகை நிக்கி கல்ரானி திருமணம் சென்னையில் இன்று நடந்தது

நடிகர் ஆதி-நடிகை நிக்கி கல்ரானி திருமணம் சென்னையில் இன்று நடந்தது

நடிகர் ஆதி மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் திருமணம் சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

யாகாவராயினும் நாகாக்க’, ‘மரக நாணயம்’ ஆகிய படங்களில் ஆதியும், நிக்கி கல்பானியும் ஜோடியாக நடித்தபோது இருவருக்குள்ளும் காதல் ஏற்பட்டது.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் கடந்த மார்ச் மாதம் நிச்சயம் செய்து கொண்டனர். இன்று மே 19-ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் அதிகாரப்பூர்வமாக தற்போது கணவன் மனைவியாக மாறிவிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக மெஹந்தி, சங்கீத், ஹல்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடிகை நிக்கி கல்ராணியின் இல்லத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்து முறைப்படி சென்னையில் உள்ள திருமண மண்டபத்தில் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

மணமகன் ஆதி தங்க நிற குர்த்தா உடையிலும், மணமகள் நிக்கி கல்ராணி தங்கம் மற்றும் பச்சை நிறம் கலந்த உடையில் தோற்றமளித்தார்கள்.

முன்னதாக நடந்த ஹல்தி விழாவில் நடிகர்கள் நானி, சந்திப் கிஷன், ஆர்யா, சாயிஷா, சிரிஷ் உள்ளிட்ட சில சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண வரவேற்பில் திரைப்பட நட்சத்திரங்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன், விஜயகுமார், ஜீவா, அருண் விஜய், நானி, R.k.சுரேஷ், பாபி சிம்ஹா, ஆனந்தராஜ், விஜய் வசந்த், ஆரி, சந்திப் கிஷன், பரத், சிரிஷ், நந்தா, ஆடுகளம் நரேன், சக்தி வாசு, ஜெய பிரகாஷ், பாண்டியராஜன், மயில்சாமி, கணேஷ் வெங்கட்ராமன், சாம்ஸ், சசிகுமார், பாகியராஜ், பூர்ணிமா, சாந்தனு, விக்ரம் பிரபு, தர்சன் கணேசன், சண்முக பாண்டியன் (விஜயகாந்த் மகன்), ரவி மரியா, டேனியல் ஆனி போப், பிரிதிவி பாண்டியராஜ், நடிகைகள் ராதிகா, சோனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்திரி ரகுராம், சுஹாசினி, ரோகிணி, இயக்குநர்கள் K.s.ரவிக்குமார், ஹரி, N.லிங்குசாமி, சாமி, கோபி, ரமணா, எழில், ப்ரிதிவ் ஆதித்யா, கணேஷ் விநாயக், வசந்தபாலன், R.கண்ணன், போயப்பட்டி ஶ்ரீனு, GNR.குமரவேல். தயாரிப்பாளர்கள் தேனாண்டாள் முரளி, பிலிம் சேம்பர் தலைவர் காட்றகட்ட பிரசாத், முன்னாள் பிலிம் சேம்பர் தலைவர் C.கல்யாண், அபிராமி ராமநாதன், அல்லு அரவிந்த், T.சிவா, N.சுபாஷ் சந்திர போஸ், T.G.தியாகராஜன், ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன், கிருஷ்ணா ரெட்டி, ஏடித நாகேஸ்வர ராஜா, கமல் போரா, தனஞ்செயன். இசை அமைப்பாளர்கள் இளையராஜா, தேவி ஶ்ரீ பிரசாத். பாடகர் கிரிஷ், எடிட்டர் k.L.பிரவீன், ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா, டான்ஸ் மாஸ்டர் ஜெப்ரி வர்டன், காஸ்டியூம் டிசைனர் ஷெர், ஆகியோர் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் நவீனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைவரையும், மணமகன் தந்தை டைரக்டர் ரவிராஜ் பினிசெட்டி, தாயார் ராதா ராணி, அண்ணன் சத்யா பிரபாஸ் பினிசெட்டி, மணமகள் நிக்கி கல்ராணி தந்தை மனோகர் கல்ராணி, தாயார் அனிதா ரேஷ்மா, ஆதி மானேஜர் அஜய்குமார், PRO ஜான்சன், ரியாஸ் அகமத் ஆகியோர் வரவேற்றார்கள்.

இந்தக் காதல் ஜோடியின் திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் #AadhiWedsNikki என்கிற ஹாஷ்டேக்குடன் டிரெண்டாகி வருகின்றன.

Our Score