தியேட்டர் கட்டணங்களில்தான் கொள்ளை என்றில்லை.. பார்க்கிங் கட்டணத்திலும் நம்மிடம் கொள்ளையடிக்கிறார்கள் தியேட்டர்காரர்கள்.
பார்க்கிங் கட்டணமாக வசூலிக்க வேண்டிய தொகையாக அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் இவ்வளவுதான் :
மாநகராட்சிகள் :
கார் – 3 ரூபாய், டூவீலர் – 2 ரூபாய், சைக்கிள் – 1 ரூபாய்.
நகராட்சிகள் :
கார் – 2.50 ரூபாய், டூவீலர் – 2 ரூபாய், சைக்கிள் – 1 ரூபாய்.
பேரூராட்சிகள் :
கார் – 2 ரூபாய், டூவீலர் – 1 ரூபாய், சைக்கிள் – 50 பைசா.
சிரிப்பாக இருக்கிறதா..? இதுதான் அரசு கொடுத்துள்ள வழிகாட்டி முறையில் இருக்கிறது.
ஆனால் நிஜத்தில்..
கே.கே.நகரில் இத்துப் போன பிட்டு படம் தியேட்டரிலேயே டூவீலருக்கு 20 ரூபாயும், காருக்கு 30 ரூபாயும், சைக்கிளுக்கு 10 ரூபாயும் வாங்குகிறார்கள்..!
சட்டமெல்லாம் நமக்குத்தாங்க.. அவங்களை மாதிரியான முதலாளிகளுக்கு இல்லீங்கோ..!!!