full screen background image

சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணம் எவ்வளவு தெரியுமா..?

ஜி.எஸ்.டி. வரி அமலாகும் சமயத்தில் கூடுதலாக இருக்கும் தமிழக அரசின் கேளிக்கை வரியையும் கட்ட முடியாது என்றும், அது தங்களுக்கு கூடுதல் சுமையைக் கொடுக்கும் என்றும் தமிழகத்தில் இருக்கும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்களைத்தான் இவர்கள் தங்களது தியேட்டர்களில் வசூல் செய்கிறார்களா என்பதை மட்டும் அவர்கள் சொல்லவில்லை.

ஏனெனில் அரசு ஆணைப்படி தியேட்டர் கட்டணங்களை வாங்கி வேண்டிய இவர்கள், சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்று மக்களிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கும் சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணங்கள் உண்மையில் எவ்வளவு தெரியுமா..?

மல்டிபிளக்ஸ் திரையரங்குகளிலேயே ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று மூன்று பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.

ஊராட்சி மல்டிபிளக்ஸில் அதிகப்பட்ச கட்டணம் ரூபாய் 85. குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10.

நகராட்சி மல்டிபிளக்ஸில் அதிகப்பட்ச கட்டணம் ரூபாய் 95. குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10.

மாநகராட்சி மல்டிபிளக்ஸில் அதிகப்பட்ச கட்டணம் ரூபாய் 120. குறைந்தபட்சம் ரூபாய் 10.

மல்டிபிளக்ஸ் இல்லாமல் ஏஸி தியேட்டர்களின் கட்டணம் :

ஊராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 15, குறைந்தப்பட்சம் ரூபாய் 5.

பேரூராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 25, குறைந்தப்பட்சம் – ரூபாய் 5

நகராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 40, குறைந்தப்பட்சம் – ரூபாய் 10

மாநகராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 50, குறைந்தப்பட்சம் – ரூபாய் 10.

ஏஸி இல்லாத தியேட்டர்களின் கட்டணம் :

ஊராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 10, குறைந்தப்பட்சம் – ரூபாய் 4.

பேரூராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 20, குறைந்தப்பட்சம் – ரூபாய் 4

நகராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 30, குறைந்தப்பட்சம் – ரூபாய் 4

மாநகராட்சி பகுதி – அதிகப்பட்சம் – ரூபாய் 30, குறைந்தப்பட்சம் – ரூபாய் 7.

உண்மையில் இப்படியா வாங்குகிறார்கள் நமது தியேட்டர் அதிபர்கள்..?

புதிய படம் வெளியாகும் முதல் இரண்டு வாரங்களுக்கு தியேட்டர்காரர்கள் விருப்பம்போல டிக்கெட்டு கட்டணத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்கிற விதி இருக்கிறது. ஆனால் இதற்கு மாவட்ட ஆட்சியர், வணிக வரித்துறை ஆணையர் இருவரிடமும் எழுத்துப்பூர்வமாக அனுமதி கேட்டு வாங்க வேண்டும்.

அந்த டிக்கெட்டுகளில் வணிகவரித்துறை முத்திரைகள் இருக்க வேண்டும்.

மல்டிபிளக்ஸ்கள் எனில் கம்பெனிகளின் விற்பனை காப்பி கொடுக்கப்பட வேண்டும்.

இப்படி சில நிபந்தனைகள் இருந்தாலும் எந்தவொரு தியேட்டர்காரரும் இதனை செய்வதே இல்லை. அதிகாரிகளும் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கமுக்கமாக இருந்துவிடுகிறார்கள்.

அள்ளு அள்ளு என்று அள்ளுகிறார்கள் தியேட்டர் அதிபர்கள்..! ஆனால் எப்போதும் கேட்டாலும் இந்தியாவிலேயே நாங்கள்தான் உண்மையாக, யோக்கியமாக தொழில் செய்கிறோம் என்பார்கள்..

Our Score