கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் மற்றும் ATM புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த “சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது” படத்தை அறிமுக இயக்குனர் மருதுபாண்டியன் இயக்குகிறார்.
பாபி சிம்ஹா, பிரபஞ்சன், லிங்கா, புதுமுகம் சரண்யா ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் சென்னையின் பல பகுதிகளிலும், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சில கிராமங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
“ரோட்டு கடை இட்லியின் சூட்டால் நாக்கை புண்ணாக்கி கொண்டு, அடி கதவு இல்லா கழிவறை, ஆறுக்கு இரண்டு அளவே கொண்ட ரூம்களின் விஸ்தாரத்தில் கனவுலகத்திலேயே சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் பேச்சுலர்ஸ்களின் கதை இது. எனது வாழ்கையில் நடந்த உண்மையான சம்பவங்களின் நகைச்சுவை நிறைந்த கோர்வையே இந்த திரைப்படம். இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளோம்” என்கிறார் இயக்குனர் மருதுபாண்டியன்.











