full screen background image

ஒரு வழியாக திரைக்கு வருகிறது ‘சரவணன் என்கிற சூர்யா’ என்னும் ‘போஸ் பாண்டி’ திரைப்படம்

ஒரு வழியாக திரைக்கு வருகிறது ‘சரவணன் என்கிற சூர்யா’ என்னும் ‘போஸ் பாண்டி’ திரைப்படம்

டைட்டில் சர்ச்சையில் சிக்கி பல துன்பங்களை அனுபவித்த ‘சரவணன் என்கிற சூர்யா’ திரைப்படத்தின் இயக்குநர் தன் படத்தின் டைட்டிலை இப்போது ‘போஸ்பாண்டி’ என்று பெயர் மாற்றிக் கொண்டது உங்களுக்குத் தெரிந்ததே..! இந்தப் படம் பண்டூன் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.  

bose pandi stills-1

‘அட்டு பையன்; லட்டு பொண்ணு’ – இதுதான் இப்படத்தின் ஒரு வரி கதை.   ஒரு சுமாரான பையன் சூப்பரான பொண்ணுக்காக காத்திருக்கிறான். அவன் விரும்பியபடி அந்தப் பெண்ணை மணந்தானா, இல்லையா என்பதுதான் கதைக் கரு. படத்தில் நகைச்சுவையோடு  இப்போதைய சமூகத்துக்கு ஏற்ற கருத்தும் சொல்லப்பட்டுள்ளது.

இதை மிக சுவாரசியமாக சினிமாத்தனம் இல்லாமல், எதார்த்தமாக, நம்ம பக்கத்துக்கு வீட்டு பையனுக்கு நடக்கும் சம்பவம் போல் படமாக்கியுள்ளார் இயக்குநர் ராஜா சுப்பையா.

நாயகன் வேடத்தை இயக்குனர் ராஜா சுப்பையாவே ஏற்று  நடித்துள்ளார்.நயன்தாராவை போன்ற ஒரு நாயகிக்காக காத்திருந்து, அது முடியாமல்.. கடைசியில் நேஹா காயத்ரியை கண்டுபிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளனர்.  இவர் ஏற்கெனவே ‘உ’ என்ற படத்தில் நடித்துள்ளார். 

கதைக்காக நாயகன் ராஜா சுப்பையா தன்னை மிகவும் அசிங்கமாக காட்ட வேண்டும் என்பதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்து தூங்காமல் நடித்துள்ளார்.  

இந்த படத்தில் ‘அசத்துதடி உன் அழகு’ என்ற melody பாடலை இயக்குனர் ராஜா சுப்பையாவே எழுதியுள்ளார். படத்தின் இசை அமைப்பாளர் தன்ராஜ் மாணிக்கமே இந்த பாடலை பாடி உள்ளார்.   உமா சுப்ரமணியம், சீர்காழி சிற்பி ஆகியோர் மற்ற பாடல்களை எழுதி உள்ளனர். 

இந்த படத்தின் trailer-ஐ பார்த்த சினிமா பிரபலங்கள் பலரும்  trailer மிகவும் புதுமையான முறையில் உள்ளது என்று பாராட்டி உள்ளனர். சிலர் முழு படத்தையும் திரையிட்டு காட்டுமாறு இயக்குனரிடம் அன்புக் கட்டளையிட்டனராம். 

பொங்கல் தினத்திலிருந்து இப்படத்தின் trailer தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான திரை அரங்குகளில் காட்டப்படும் என்று இப்படக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் பொங்கல் முதல் இப்படத்தின்  trailer, youtube-லும் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர். 

படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் முடிந்து படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. 2 வசனங்களை மட்டுமே நீக்கிவிட்டு ‘யு’ சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள். இந்த மாத இறுதியில் ‘போஸ்பாண்டி’ திரைக்கு வருகிறது.

Our Score