full screen background image

“சினிமா விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது..!” – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு..!

“சினிமா விமர்சனங்கள் வெளியிட தடை விதிக்க முடியாது..!” – சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு..!

“புதிய திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்கு விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் வெளியிட தடை விதிக்க முடியாது” என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

“இப்போதெல்லாம் ஒரு புது படம் வெளியாகிறது என்றால் அந்தப் படத்தின் முதல் நாளில், முதல் காட்சியை பார்பவர்கள் படம் முடிந்த பிறகு விமர்சனம் கூறும்போது படம் பிடிக்கவில்லை என்றால் கடுமையாக விமர்சனம் செய்வது, அந்த படத்தின் பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது” என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடந்த நவம்பர் 20-ம் தேதியன்று அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உரிமை உள்ளது. ஆனால், அது திரைப்படத்தை பற்றி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, திரைப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகர் மீது தனிமனித தாக்குதல்கள் மற்றும் அவர்கள் மீது இருக்கும் வன்மத்தை பொதுவெளியில் கக்க ஒரு கருவியாக, திரைப்பட விமர்சனத்தை சில ஊடகங்கள் சமீப காலங்களில் பயன்படுத்தி வருவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த 2024 வருடத்தில் ‘இந்தியன்-2’, ‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ போன்ற திரைப்படங்களுக்கு Public Review/Talk மூலம் பெருமளவில் பாதிப்பை யூடியூப் சேனல்கள்கள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது” என கூறியிருந்தார்கள்.

இதன் காரணமாக புதிதாக வெளி​யாகும் தமிழ்ப் படங்களை முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப தடை விதிக்​கக் ​கோரி, நடப்பு தமிழ் திரைப்பட தயாரி்ப்​பாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளரும், தயாரிப்பாளருமான ‘அம்மா கிரியேஷன்ஸ்’ டி.சிவலிங்கம் என்ற சிவா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்கல் செய்​திருந்தார்.

அதில், ‘‘சமீப​காலமாக புதிதாக வெளி​யாகும் திரைப்​படங்களை யூ-டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்​களில் விமர்​சனம் என்ற பெயரில் திட்​ட​மிட்டு அவதூறு பரப்புவது அதிகரித்து வருகிறது. இந்த எதிர்மறை விமர்​சனங்கள் படம் பார்க்க செல்​லும் ரசிகர்​களின் மனநிலையை மாற்றி, பல படங்களை தோல்​வியடைய செய்​கின்றன. இதனால் பல கோடிகளை செலவிட்டு பெரிய பட்ஜெட்​டில் படங்களை தயாரிக்கும் தயாரிப்​பாளர்கள் கடும் நஷ்டத்​துக்கு ஆளாக நேரிடு​கிறது.

எனவே புதிய படங்கள் வெளி​யாகும்​போது அந்தப் படங்கள் பற்றி முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் செய்​வதற்குத் தடை விதிக்க வேண்​டும். அதேபோல விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்ப யூ-டியூப், எக்ஸ் தளம் உள்ளிட்ட சமூக வலைதளங்​களுக்​கும் கட்டுப்​பாடுகளை விதிக்க வேண்​டும். இது தொடர்பாக விதி​முறைகளை வகுக்க மத்திய, மாநில அரசுகளுக்​கும் உத்தரவிட வேண்​டும்” எனக் கோரியிருந்​தார்.

இந்த மனு, நீதிபதி எஸ். சவுந்தர் முன் இன்றைக்கு விசா​ரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்​பில் வழக்​கறிஞர் விஜயன் சுப்​ரமணியன் ஆஜராகி, பல கோடி ரூபாய் செலவில் எடுக்​கப்​பட்டு வெளி​யிடப்படும் திரைப்படங்களை விமர்​சனம் என்ற பெயரில் அவதூறான எதிர்மறை கருத்​துக்​களைத் திட்​ட​மிட்டு உள்நோக்​கத்​துடன் பரப்பு​கின்​றனர். இதனால் முதல் 3 நாட்​களுக்கு விமர்​சனம் செய்ய தடை விதிக்க வேண்​டும், என வாதிட்​டார்.
 
இதையடுத்து நீதிபதி, “விமர்​சனம் என்ற பெயரில் அவதூறு பரப்​பினால் அதுதொடர்பாக சம்பந்தப்​பட்​ட​வர்கள் மீது போலீஸில் புகார் அளி்க்​கலாம். அதே நேரம் பொது​வெளி​யில் விமர்சிப்பது என்பது தனி மனித கருத்து சுதந்​திரம் என்ப​தால் பொத்​தாம் பொதுவாக எந்த உத்தரவும் பிறப்​பிக்க முடி​யாது. சில படங்​களுக்கு நேர்​மறை​யான, ஆக்கப்​பூர்​வமான விமர்​சனங்​களும் வருகின்றன. எனவே மனுதா​ரரின் கோரிக்கை தொடர்பாக மத்​திய, ​மாநில அரசுகளும், யூ-டியூப் நிறு​வன​மும் 4 வார ​காலங்​களி்ல் பதிலளிக்​க வேண்​டும்..” என உத்​தர​விட்​டு ​விசா​ரணையை தள்​ளி வைத்​துள்​ளார்​.
Our Score