full screen background image

‘ருத்ரன்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

‘ருத்ரன்’ படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை..!

‘பொல்லாதவன்’, ‘ஜிகர்தண்டா’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன். இவர் தற்போது ‘ருத்ரன்’ என்ற திரைப்படத்தினை தயாரித்து, இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், ப்ரியா பவானி ஷங்கர், சரத்குமார், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்த ருத்ரன் திரைப்படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாக இருந்தது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 240ம் தேதிவரையிலும் இந்த ருத்ரன் படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ருத்ரன் படத்தின் இந்தி டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற வெளியீட்டு நிறுவனம் ரூ.12.25 கோடிக்கு வாங்கியிருந்தது. இதற்காக 10 கோடி ரூபாய் அட்வான்ஸாக பைவ் ஸ்டார்’ நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது.

வரும் ஏப்ரல் 14-ம் தேதி இத்திரைப்படம் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீதித் தொகையான 4.5 கோடியை செலுத்தாத காரணத்தால் ஒப்பந்தத்தை ஃபைவ் ஸ்டார் தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்தது.

இதை தொடர்ந்து ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ருத்ரன் படத்தை ஏப்ரல் 24-ம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Our Score