அப்பா மீடியாவின் ‘எங்க அப்பா’ இசை ஆல்பத்தின் வெற்றியைத் தொடர்ந்து “சுவாமி சரணம் பாடுவோம்” என்ற இரண்டாவது இசை ஆல்பம் உருவாகியுள்ளது.
லக்ஷனா ரிஷி பல திரைக்க லைஞர்களுடன் இணைந்து “கார்த்திகையில் மாலையிட்டு சரணம் பாடுவோம்; சுவாமி சரணம் பாடுவோம்; நெய் விளக்கு தீபமிட்டு சரணம் பாடுவோம்” என்று ஆடிப் பாடிநடித்திருக்கும் பாடல் காட்சியை கேரளாவின் மலைப் பகுதிகளில் உள்ள புல்லுமேடு. வாகமன், பசுப்பாறை, மேரி குளம், பருந்தும் பாறை, மற்றும் ஐயப்பன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கினார்கள்.
இதில் கருப்பு ஆடை அணிந்து குழந்தை நட்சத்திரம் லக்ஷனா ரிஷியுடன் இணைந்து திரைக் கலைஞர்கள் பாவா லட்சுமணன், காதல் சுகுமார், கொட்டாச்சி. ஆன்ந்த் செல்வராஜ், செந்தூர்பாண்டியன், சாரப் பாம்பு சுப்புராஜ், காதல் சரவணன், ராஜாஜிராஜன், சித்ரகுப்தன். தெனாலி சாமி.சங்கர், சிவலிங்கம் மற்றும் பலர் ஆடிப் பாடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ரெஜி, இசை – சந்தோஷ் சாய், படத்தொகுப்பு – பிரகாஷ் மப்பு, தயாரிப்பு மேற்பார்வை – சைமன் நெல்சன், பத்திரிக்கை தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – திருமதி அனீஷா சதீஷ், எழுத்து இயக்கம் – எஸ்.வி.ரிஷி.
இந்தப் பாடல் காட்சி ‘கால் கொலுசு’ படத்தை இயக்கிய டைரக்டர் எஸ்.வி.ரிஷி இயக்கிக் கொண்டிருக்கும் ‘சுவாமி ஐயப்பன்’ வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் இடம் பெறுகிறது.
கதைப்படி மாலை போட்டுக் கொண்ட ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்வதும் அதனால் ஏற்படும் ஆபத்துகளும், பிரச்சனைகளும் அதிலிருந்து எப்படி தப்பித்து ஐயப்பனின் ஆசியோடு ஐயனை தரிசனம் செய்கிறார்கள் என்பதை விளக்கும் பாடல் காட்சிதான் இது.