full screen background image

பூச்சி முருகனுக்கு அளித்த போலீஸ் பாதுகாப்புக்கு எதிரான நடிகர் சங்கத்தின் வழக்கு தள்ளுபடி..!

பூச்சி முருகனுக்கு அளித்த போலீஸ் பாதுகாப்புக்கு எதிரான நடிகர் சங்கத்தின் வழக்கு தள்ளுபடி..!

கடந்த வெள்ளியன்று நடிகர் சங்கத்திற்கெதிராக கிடைக்கப் பெற்ற இரண்டாவது பின்னடைவு தீர்ப்பு இது.

நடிகர் பூச்சி முருகன் போலீஸ் பாதுகாப்புடன் நடிகர் சங்க நிகழ்ச்சிகளுக்கு வருவதற்கு சிட்டி சிவில் நீதிமன்றம் அளித்த அனுமதி தீர்ப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சங்கம் கொடுத்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

நடிகர் பூச்சி முருகன் வரிசையாக பல விளக்கங்கள், கடிதங்கள் கேட்டு நடிகர் சங்க நிர்வாகிகளை கோபமூட்டியதால் அவருக்கு எதிராகாவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இந்த நிலையில் பொதுக்குழுவிற்கு செல்லும்போது சங்க நிர்வாகிகளின் ஆதரவாளர்களால் தான் தாக்கப்படலாம் என்று நினைத்து தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். கோர்ட்டும் அதை ஏற்று அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுத்த்து. கடைசியாக நடைபெற்ற இரண்டு பொதுக்குழுவிலும் பூச்சி முருகன் போலீஸ் பாதுகாப்புடன்தான் வந்திருந்தார்.

இதனை எதிர்த்து நடிகர் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இந்த வழக்குதான் சென்ற வெள்ளியன்று தள்ளுபடியாகி தீர்ப்பாகிவிட்டதாம். பூச்சி முருகன் மட்டுமல்ல சுந்தரம், காஜா என்ற இரண்டு நடிகர்களுக்கும் இந்த போலீஸ் பாதுகாப்பு உண்டாம்.

ஆக, வரும் தேர்தலில் போலீஸ் பாதுகாப்புடன் வந்து இந்தக் கலைஞர்கள் தங்களது பொன்னான ஓட்டுக்களை அளிக்க இருக்கிறார்கள்..!

Our Score