இந்த வாரம் முழுக்க நடிகர் சங்க வாரமோ என்று ஐயப்படும் அளவுக்கு நடிகர் சங்க கட்ட்ட விவகார வழக்குகளும், பேச்சுகளும், நடிகர் சங்க தேர்தல் வழக்குகளும் அம்பலத்திற்கு வந்து கோடம்பாகத்தை பேய் பட பாணியில் அல்லல்பட வைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த நேரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 2 வழக்குகளின் தீர்ப்புகள் வெளியாகி இப்போதைய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன.
முதலாவதாக நடிகர் குமரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியது செல்லாது என்று சென்னை சிட்டி சிவில் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
இதையே காரணம் காட்டி சங்கத்தின் தலைவர்களை அவமானப்படுத்தி எழுதியதாகச் சொல்லி நடிகர் குமரிமுத்துவை சங்கத்தில் இருந்து நீக்குவதாக கடிதம் அனுப்பினார்கள் சங்க நிர்வாகிகள்.
குமரிமுத்து இதனை எதிர்த்து 6-வது சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்போது குமரிமுத்து நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி முருகானந்தம் தீர்ப்பளித்தார். இதன் பின்னர் கடந்தாண்டு காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழுவிற்கு குமரிமுத்துவும் வந்திருந்து கோர்ட் உத்தரவைக் காட்டி கலந்து கொண்டார்.
இருந்தாலும் அந்த பொதுக்குழுவில் நாடக நடிகர்களின் ஆதரவோடு குமரிமுத்துவை நிரந்தரமாக நீக்கினார்கள் நடிகர் சங்க நிர்வாகிகள். இதை எதிர்த்தும் அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் குமரிமுத்து. இந்த வழக்கில்தான் கடந்த வெள்ளிக்கிழமையன்று இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.
இந்த்த் தீர்ப்பில் நடிகர் குமரிமுத்துவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கியது செல்லாது. சங்க விதிகளுக்கெதிரானது. முறைப்படி செயல்படுத்தப்படவில்லை என்று சொல்லி தீர்ப்பு வழங்கியிருக்கிறார் நீதிபதி.
இப்போ என்ன ஆகும்..? மறுபடியும் முதல்ல இருந்துதான்..!