‘மாஸ்டர்’ படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடத் தடை..!

‘மாஸ்டர்’ படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடத் தடை..!

நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்தில் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் ‘மாஸ்டர்’ படத்தை சட்ட விரோதமாக இணையத் தளங்களில் வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

400 இணையத் தளங்களிலும், 9 கேபிள் டிவிகளிலும் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

200 கோடி ரூபாய் செலவில் தயாரித்து முடிந்து 9 மாதங்கள் கடந்து வெளியாகவுள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் இணையத்தில் வெளியானால் தங்களுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும்” என்று படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் இந்தத் தடை உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

Our Score