full screen background image

‘சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு..!

‘சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு..!

‘CSK – சார்லஸ் ஷஃபிக் கார்த்திகா’ படத்தின் பாடல்கள் பிப்ரவரி 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. பிரகாஷ் ராஜ் , KV குகன் ஆகியோரிடம் உதவியாளராய் பணிபுரிந்த S சத்தியமூர்த்தி இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். புதுமுக இசையமைப்பாளர் சித்தார்த் மோகன் இந்த த்ரில்லர் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.

SS Film Factory தயாரித்திருக்கும் இப்படத்தை, நல்ல கதையம்சமுள்ள படங்களை வாங்கி வெளியிட்டு வரும் Vibrant மூவீஸ் நிறுவனத்தால் வெளியிடுகிறார்கள்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேசிய இசையமைப்பாளர் சித்தார்த் மோகன், “இந்தப் படத்தில் நான் வேலை செய்தது தினம் தினம் எனக்கு ஒரு புது அனுபவமாய் இருந்தது. இயக்குனர் சத்தியமூர்த்தி எழுதியுள்ள முருகன் பாட்டு அனைவரின் எண்ணங்களை வருடும் வண்ணம் அமைத்துள்ளோம்.

‘காஞ்சி போன’ என்ற பாடலை எழுதியது மிகவும் புதிய அனுபவமாய் இருந்தது. அனைவரது கவனத்தை ஈர்க்க ஒரு விதமான Psychic சப்தத்தை பின்னணி இசையில் சேர்த்துள்ளோம். அனைத்து பாடல்களும் எல்லாவிதமான ரசிகர்களுக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனக்கு உறுதுணையாய் இருந்த பாடலாசிரியர்கள், பாடகர்கள் மற்றும் எனது குழுவினர் அனைவருக்கும் நன்றி…” என்றார்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது.

Our Score