இன்று 27-02-2015 வெள்ளிக்கிழமை 4 நேரடி தமிழ்ப் படங்கள் ரிலீஸாகியுள்ளன.
1. எட்டுத்திக்கும் மதயானை
ராட்டினம் பிக்சர்ஸ் சார்பில் இயக்குநர் கே.எஸ்.தங்கசாமி தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார். ஸ்டூடியோ-9 ஆர்.கே.சுரேஷ் இந்தப் படத்தை வாங்கி வெளியிட்டிருக்கிறார்.
சத்யா, ஸ்ரீமுகி, கே.எஸ்.தங்கசாமி, லகுபரன், சாம் ஆண்டர்சன், பானுசந்தர், மதுரை பாலா, அசத்தப் போவது யாரு ராஜ்குமார், ஸ்ரீபிரியா ஆகியோர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு ஆர்.ஜே.ஜெய். இசை மனுரமேசன். எடிட்டிங் – தீபக் துவாரகநாத். கலை – மணி கார்த்திக்.
2. காக்கிசட்டை
வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பாக நடிகர் தனுஷ் தயாரித்திருக்கிறார். இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா ஜோடியாக நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – சுகுமார். இசை – அனிருத். இயக்கம் – ஆர்.எஸ்.துரை செந்தில்குமார்
3. மணல் நகரம்
DJM Associates நிறுவனம் இப்படத்தைத் தயாரித்திருக்கிறது. முழுக்க முழுக்க துபாய் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலேயே ஷூட்டிங் நடைபெற்றுள்ளது.
இதில் ‘ஒருதலைராகம் சங்கர்’, பிரஜின், தனிக்சா, வருண் ஷெட்டி கேரவன் அருணாச்சலம் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு ஜெ.ஸ்ரீதர், எடிட்டிங் – எஸ்.பி.அஹமது. ஸ்டண்ட் – ராஜேஷ் கண்ணன், வசனம் – ஆர்.வேலுமணி, இசை – ரெனில் கெளதம் – இயக்கம் – ‘ஒரு தலைராகம்’ சங்கர்
4. வஜ்ரம்
ஸ்ரீசாய்ராம் பிலிம் பேக்டரி பட நிறுவனம் சார்பாக P.ராமு தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ‘பசங்க’, ‘கோலிசோடா’ வெற்றிப் படங்களில் நடித்த ஸ்ரீராம், கிஷோர், பாண்டி, குட்டி மணி ஆகிய நால்வரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கதாநாயகியாக பவானி ரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.
மற்றும் ஜெயபிரகாஷ், தம்பி ராமையா, மயில்சாமி, மூணார் ரமேஷ், நந்தா சரவணன், சானா, ஜெய், பாண்டிரவி, பெல் பாஸ்கர், ஓ.ஏ.கே.சுந்தர், ஜெயமணி, சமிரா, அம்சாதேவி, நாகு ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்
ஒளிப்பதிவு – A.R. குமரேசன், இசை – F.S.பைசல், பாடல்கள் – சினேகன், வசனம் – லோகிதாஸ், எடிட்டிங் – மாரீஸ், ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ், சுப்ரீம் சுந்தர், கலை – மகேஷ்.N.M, நடனம் – விஜய், ராஜ்விமல், தயாரிப்பு – P.ராமு, கதை, திரைக்கதை, இயக்கம் – S.D.ரமேஷ்செல்வன்.