full screen background image

அழிந்து போன நகரைத் தேடியலையும் கதைதான் ‘பிரம்மபுரி’ திரைப்படம்

அழிந்து போன நகரைத் தேடியலையும் கதைதான் ‘பிரம்மபுரி’ திரைப்படம்

369 பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எபின் கொட்ட நாடன் தயாரித்துள்ள திரைப்படம் ‘பிரம்மபுரி.’

இந்தப் படத்தில் வர்கீஸ், ஜெர்மனியை சேர்ந்த மாடல் அழகி மார்ஷா, மிதுனா, ராம்சுபீன் ஜோஸ், பவானி அம்மா, கௌதம், மலேசியாவை சேர்ந்த அஜித் ஆகியோருடன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ராகேஷ் வாலி ஒளிப்பதிவையும், மிக்கு காவில் இசையையும், பிரதீப் சங்கர் படத் தொகுப்பையும் கவனிக்கின்றனர்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் கிரண் மோகன், இயக்குநர் பார்த்திபனிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் கிரண் மோகன், “பல நூற்றாண்டுகளுக்கும் முன்பு தமிழகத்தில் இருந்த ‘பிரம்மபுரி’ என்ற நகரம் இருந்ததாகவும், அது இடையில் திடீரென்று அழிந்து போனதாக காது வழி தகவல்.  அந்த நகரில் மிகப் பெரிய வைரப் புதையல் இருந்ததாகக் கேள்விப்பட்ட ஒரு குழுவினர் அந்த நகரையும்,  புதையலையும் தேடி புறப்படுகின்றனர்.

அந்தத் தேடுதல் பயணத்தின்போது அந்தக் குழுவினர் சந்திக்கும் திடுக்கிடும் சம்பவங்களும், பல அமானுஷ்யமான நிகழ்வுகளும் அவர்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை உண்டாக்குகிறது.

இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா…? அல்லது மாண்டார்களா..? என்பதை திரில்லாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறோம்.

இந்தப் படத்தின் பெரும் பகுதி அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு – கேரளா-கர்நாடக வனப் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது…” என்றார்.

 இத்திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

 

Our Score