சி.சி.வி. குரூப்ஸ் சினிமாஸ் மற்றும் வீரகாளியம்மன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் பொன்கோ சந்திரபோஸ், பொன்கோ சந்திரசேகர், பொன்கோ விஜயன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘பூதமங்கலம் போஸ்ட்’.
இந்தப் படத்தில் ராஜன் மலைச்சாமி, விஜய் கோவிந்தசாமி, மெளனிகா ரெட்டி, அஸ்மிதா, மு.தட்சிணாமூர்த்தி, பந்தா பாண்டி, சாய் பாலாஜி, ஆனந்தராஜ், மதுரை சூர்யா ஆகியோருடன் மாஸ்டர் தக்ஷித் தேவேந்திராவும் நடித்துள்ளனர்.
நடனப் பயிற்சியை ஜாய் மதியும், சண்டை இயக்கத்தை ‘நாக் அவுட்’ நந்தாவும், கலையை சாய்மணியும், தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகனும், ஒளிப்பதிவை பிரேம்குமாரும், படத் தொகுப்பை ஏ.எல்.ரமேஷ் கவனித்துள்ளனர்.
சிவயன், அர்ஜுன் எழுதிய பாடல்களுக்கு அர்ஜுன் இசையமைக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நாயகனாகவும் நடித்து படத்தையும் இயக்கியுள்ளார் ராஜன் மலைச்சாமி.
இத்திரைப்படம் பற்றிப் பேசிய இயக்குநர் ராஜன் மலைச்சாமி, “நாம அரசியல்ல இருக்கலாம். நண்பர்களுக்குள் அரசியல் இருக்கக் கூடாது’ என்பார்கள்.
படத்தின் நாயகன் பணம், பதவி, அதிகாரம் இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற எண்ணத்தில் தான் முன்னேறுவதற்கு அரசியலை பயன்படுத்துகிறான். ஒரு கட்டத்தில் அதற்கான வழி கிடைக்கிறது. அப்பொழுதுதான் நண்பனால் சதி நடக்கிறது.
இருவருக்கும் இடையில் நடைபெறும் போட்டியில் யார் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றினார்கள் என்பதை ஆக்சனுடன் நகைச்சுவை கலந்து அதற்கு படமாக்கி இருக்கிறோம்.
மதுரை, அழகர்கோவில், மேலுார், சிவகங்கை, சென்னையில் எண்ணூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்துள்ளது. தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்டது..” என்றார்.