திருப்பதி ஏழுமலையானின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படம் ‘பிரம்மாண்ட நாயகன்’

திருப்பதி ஏழுமலையானின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் திரைப்படம் ‘பிரம்மாண்ட நாயகன்’

நாகார்ஜுனா,  அனுஷ்கா,  பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய்குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் இந்தாண்டு பிப்ரவரியில் வெளியான தெலுங்கு படம் ‘ஓம் நமோ வெங்கடேசய்யா.’

இப்படத்தை  இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும்  'பாகுபலி' புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திரராவ்.

இத்திரைப்படம் இப்போது தமிழில் 'பிரம்மாண்ட நாயகன்' என்கிற பெயரில் வெளியாகவிருக்கிறது.

ராமா என்ற வெங்கடேச பெருமாளின் பக்தனின் உண்மைச் சம்பவத்தை  மையமாகக் கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது. இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப்   பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.  

இது பக்தி ரசமும் சமூகப் பின்னணியும்  கலந்து எடுக்கப்பட்டுள்ளது. பெருமாளின் பக்தையான ஆண்டாளின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அனுஷ்கா கதாபாத்திரத்தை உருவாக்கி கதாநாயகியாக நடிக்கவைத்துள்ளனர்.

anuskha

மகாபாரத கிருஷ்ணராக நடித்து புகழ் பெற்ற சௌரப் ஜெயின் வெங்கடேச பெருமாள் வேடம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளார்.

‘பாகுபலி’க்கு இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி இப்படத்தின் கதையின் தேவைக்கேற்ப 12 பாடல்களை சிறப்பாக இசையமைத்துள்ளார். 

பல ஆன்மீக புராணங்கள் தொடர்பான பல கேள்விகளுக்கும் இத்திரைப்படம் பதில் சொல்கிறது. பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள உறவு என்ன..? திருமலை உருவானவிதம் எப்படி...? ‘ஆனந்த நிலையம்’ என பெயர் வரக் காரணம் என்ன..?  ‘வேங்கடம்’ என்ற சொல்லுக்கு பொருள் விளக்கம் என்ன..? ‘பாலாஜி’ என்று பெயர் வரக் காரணம் என்ன..? திருமலையில் முதலில் யாரை வணங்குவது..? எனப்  பல கேள்விகளுக்கான  விளக்கங்களை இப்படத்தில் தெளிவான படக் காட்சிகளாக  அமைத்து விளக்கியுள்ளனர்.

இப்படத்தைப் பார்த்த நடிகர் சிவகுமார் "அண்மைக் காலங்களில் வந்துள்ள படங்களில் இது ஒரு முக்கியமான பக்திப் படம். சுவாரஸ்யமாக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது.  பக்தி மணம் கமழ உருவாகியுள்ளது. படம் பார்த்து முடித்ததும் திருப்பதி தேவஸ்தானம் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது..." என்று பாராட்டியுள்ளார். திரையுலகில் பெரிய அனுபவசாலியான அவரது பாராட்டைப் பெருமையாகக் கருதுகிறது படக் குழு.

பக்திக் கருத்துகளைக் கூறினாலும் இது ஒரு முழு நீள சமூகப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.  விறுவிறுப்பான பிரமாண்ட காட்சிகளுக்குப் பஞ்சமில்லாதபடி திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

வசனம், பாடல்களை D. S.பாலகன் எழுதியுள்ளார்.  J. K. பாரவி கதை எழுத கோபால் ரெட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். 

‘பாகுபலி’க்குப் பிறகு அனுஷ்காவுக்குப் பெயரும் புகழும் சேர்க்கும்படி அவரது பாத்திரம் அடைந்து இருப்பது படத்தின் பெருமைகளில் ஒன்று.

தமிழகத் திரைகளில் இந்தப் 'பிரம்மாண்ட நாயகன்'  விஸ்வரூபம் எடுக்கும்விதத்தில் விரைவில் வெளியாகவுள்ளது.