பட வாய்ப்பு இல்லையென்றால் அப்படியே விட்டுவிட முடியாதல்லவா..? கிடைத்த வாய்ப்பினில் நடிப்போம் என்று பல நடிகைகள் நினைப்பார்கள். அப்படி நினைக்கும் படங்களில் பலவையும் சொதப்பலாகி அவர்களுடைய பெயரைத்தான் கெடுக்கும்.
அப்படியொரு முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் நடிகை அனுஷ்கா. 2000-ம் ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா ‘பாகுபலி’ படத்தில் நடித்து இந்திய அளவில் மிகவும் பிரபலமானார்.
பின்னர் அனுஷ்காவின் உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்தன. வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த அவருக்கு சமீபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை.
முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவை ஜோடியாக்க மறுத்தனர். கடைசியாக அனுஷ்கா நடிப்பில் ‘சைலன்ஸ்’ என்ற படம் வந்தது.
இந்த நிலையில் அனுஷ்கா தற்போது 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சையான கதையம்சம் கொண்ட ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
படத்தில் இவருக்கு ஜோடியாக 20 வயது இளைஞராக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
‘பாகுபலி’யில் தேவசேனாவாக இந்திய திரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் அனுஷ்கா இப்படியொரு கதையில் நடிக்கலாமா என்று அவருடைய ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள்.
இது போன்று சில்லறை கதைகளில் அனுஷ்காவுக்கு முன்பாகவே பல நடிகைகளும் நடித்திருக்கிறார்கள், பானுப்பிரியாவும் தனது கடைசி ஹீரோயின் வாழ்க்கைக் காலத்தில் ஒரு தப்பான படத்தில் நடித்து தனது பெயரைக் கெடுத்துக் கொண்டார். இப்போது அனுஷ்காவும் இதே வழியில் களம் இறங்கியிருக்கிறார்.
யார் இதையெல்லாம் எடுத்துச் சொல்வது..?