ஆர்யா தயாரிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ம் பாகம்..!

ஆர்யா தயாரிக்கும் பாஸ் என்கிற பாஸ்கரன் 2-ம் பாகம்..!

ஒரு திரைப்படத்தின் 2-ம் பாகம் வருவது ஆங்கிலத் திரைப்படங்களில் வாடிக்கையான விஷயம்.  இந்திய அளவில் அதே நடிகர்களை வைத்து 2-ம் பாகம் அதே கதையில் இதுவரையிலும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது.. அதே கதை இல்லாமலும், அதே நடிகர்கள் இல்லாமலும் வேறு கதைகளில்.. வேறு வேறு நடிகர்களை வைத்துத்தான் பல சீரியஸ் டைப் சினிமாக்கள் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழில் ‘பில்லா’ படம் முதலில் ரஜினியை வைத்து எடுக்கப்பட்டு பின்பு அஜீத் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. அதன் பின்பு இந்த அஜீத் ‘பில்லா’-வின் 2-ம் பாகம் அஜீத்தை மட்டுமே வைத்துக் கொண்டு, வேறு நடிகர், நடிகைகளை நடிக்க வைத்து எடுக்கப்பட்டது..

ஆனால் இப்போது 2010-ம் ஆண்டு எடுக்கப்பட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் 2-ம் பாகத்தை அதே யூனிட்டை வைத்தே தயாரிக்கப் போகிறார்களாம். இதன் ஹீரோ ஆர்யாவே இதனை தயாரிக்கப் போகிறார். இயக்கம் எம்.ராஜேஷ்தான். சந்தானமும், நயன்தாராவும் உடன் இருக்கப் போகிறார்கள். கூடவே தமன்னாவும் நடிக்கிறாராம்.

ஆர்யா-நயன்தாரா திருமணத்தோடு முடிந்த முதல் பாகத்தின் தொடர்ச்சி இந்தப் படத்தில் தொடரப் போகிறதாம். ஸோ.. இதன்படி பார்த்தால் உண்மையான தொடர் கதையான முதல் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறோம்.

முதல் பாகத்தை வாசன் விஷூவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ்.சீனிவாசன் தயாரித்தார். ஆனால் படத்தை வாங்கி வெளியிட்டது உதயநிதி ஸ்டாலின். படத்தின் மொத்த வசூல் 37 கோடியையும் தாண்டி இமாலய வெற்றியைப் பெற்றிருந்தது.

‘நிமிர்ந்து நில்’ படத்தின் தயாரிப்புப் பணியில் ஏற்பட்ட சுணக்கம், விற்பனையில் ஏற்பட்ட மந்த நிலை.. வசூலில் கிடைத்திருக்கும் ஏமாற்றம்… இதையெல்லாம் மனதில் கொண்டு முதல் பாகத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் கே.எஸ்.சீனிவாசன், 2-ம் பாகத்தை தன்னால் தயாரிக்க முடியாது என்று கூறிவிட்டதால் ஹீரோ ஆர்யாவே இதனைத் தயாரிக்க முன் வந்துள்ளாராம்..!

நேற்று முன்தினம் மதியம் முதல் மாலைவரையிலும் ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்யாவுடன், எம்.ராஜேஷ் தலைமையிலான டீம் கலந்துரையாடி.. இந்த பிராஜெக்ட்டை பைனல் செய்துள்ளதாம்..! 

“அவனவன் ஊர்ல 10, 20 பிரெண்ட்ஸ்களை வைச்சுக்கிட்டு ஹேப்பியா இருக்கான். ஒரேயொரு பிரெண்ட்டை வைச்சுக்கிட்டு நான் படுற பாடு இருக்கே..!?” என்று சந்தானம் இப்படத்தில் புலம்பித் தள்ளிய டிரேட் மார்க் பன்ச் டயலாக் போல வேறொரு டயலாக் இந்த இரண்டாம் பாகத்திலும் நிச்சயம் இருக்கும் என்று நம்பலாம்.

Our Score