full screen background image

“பாலிவுட் திரையுலகம் ஒரு சாக்கடை…” – கொதிக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்..!

“பாலிவுட் திரையுலகம் ஒரு சாக்கடை…” – கொதிக்கிறார் நடிகை கங்கனா ரணாவத்..!

நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்பார்த்தது போலவே நடிகை கங்கனா ரணாவத் தனது சைபர் தாக்குதலைத் துவக்கிவிட்டார்.

கடந்த வருடம் பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகத்தை மிகக் கடுமையாகக் கண்டித்து வருகிறார் நடிகை கங்கனா ரணாவத்.

பாலிவுட் ஒரு சாக்கடை..”, “இங்கு வாரிசு அரசியல் அதிகம்”, “மாஃபியா கூட்டங்கள் நிறைந்த கூடாரம் இது” என்று பாலிவுட்டை தொடர்ந்து கடுமையாகத் தாக்கி வரும் கங்கனா, இப்போது மட்டும் சும்மா இருப்பாரா என்ன..? சும்மாவே ஆடுவார்.. இப்போது சலங்கை கட்டிவிட்ட நிலையில் என்னாவாகும்..?

ராஜ் குந்த்ராவின் கைது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராமில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறார் கங்கனா ரணாவத். அந்தச் செய்தியில், “இதனால்தான் பாலிவுட் திரைத்துறையை நான் சாக்கடை’ என்கிறேன். மின்னுவதெல்லாம் பொன்னல்ல. எனது அடுத்த தயாரிப்பான ‘டிகு வெட்ஸ் ஷெரூ’ படத்தில், இந்த பாலிவுட்டின் மோசமான முகத்தை நான் வெளிச்சம் போட்டுக் காட்டவிருக்கிறேன். அறநெறிகள் இருக்கும் கண்டிப்பான அமைப்பும், படைப்பாற்றல் துறையில் மனசாட்சியும் இருக்க வேண்டும். கூடவே கண்டிப்பாக ஒரு சாட்டையும் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இனி அடுத்தடுத்து தனது தாக்குதலால் பாலிவுட்டை அதிர வைப்பார் கங்கனா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Our Score