அசால்ட் சேது பாபி சிம்ஹாவுக்கும் நடிகை ரேஷ்மி மேனனுக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் நடக்கவுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்திருக்கிறார்.
பாபி சிம்ஹாவும், நடிகை ரேஷ்மி மேனனும், ‘உறுமீன்’ என்கிற படத்தில் இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் நடித்தபோதே இருவரும் காதலிப்பதாகவும், திருமணத்திற்கு தயாராகி வருவதாகவும் முன்பு செய்திகள் வெளியிட்ட போதெல்லாம் இருவரும் வழக்கம்போலவே அதை மறுத்தனர்.
அவர்களே செய்தியைக் கிளப்பிவிட்டுவிட்டு பின்பு மறுப்பதெலல்லாம் சினிமாவுலகத்தில் சகஜம்தான்..
இடையில் ரேஷ்மி மேனன் தனது ஒவ்வொரு பேட்டியிலும் அது ஒரு விஷயமே இல்லை. அப்படியொரு எண்ணமே இல்லை. நீங்க கடைசில சிரிக்கப் போறீங்க என்றெல்லாம் நமக்கு கிச்சுக்கிச்சு மூட்டினார்.
கிருமி படத்தில் ஹீரோவுடன் ரேஷ்மி மேனன் மிக நெருக்கமாக நடித்ததால் இந்தக் காதலும் ஊத்திக் கொண்டது என்றெல்லாம்கூட கடந்த மாதம் செய்தியைப் பரப்பினார்கள்.
ஆனால் இன்றைக்கு அசால்ட் சேதுவை உருவாக்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜே தனது டிவீட்டர் பக்கத்தில் மணமக்களு்ககு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். வரும் நவம்பர் 8-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று இந்த நிச்சயத்தார்த்த விழா நடைபெறவிருக்கிறதாம்.
நாமும் நமது பங்கு்ககு காதலர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்..!