full screen background image

“புளூ ஸ்டார்’ அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும்” – இயக்குநர் ஜெய்குமாரின் நம்பிக்கை!

“புளூ ஸ்டார்’ அனைவரும் கொண்டாடும் படமாக இருக்கும்” – இயக்குநர் ஜெய்குமாரின் நம்பிக்கை!

அசோக் செல்வன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, லிசி ஆண்டனி, இளங்கோ குமாரவேல், பகவதி பெருமாள், அருண்பாலாஜி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘புளூ ஸ்டார்’.

லெமன் லீப் கிரியேசன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் R.கணேஷ்மூர்த்தி, G.சவுந்தர்யா, மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநரும், தயாரிப்பாளருமான பா.இரஞ்சித்தும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – தமிழ் அழகன், இசை – கோவிந்த் வசந்தா, படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – ஜெய்யரகு , சண்டைபயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம், அறிமுக இயக்குநரான ஜெய்குமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் ஜெய்குமார் பேசும்போது, “அரக்கோணம் பக்கத்திலிருக்கும் சிறிய ஊரில் வாழ்கிற இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் விளையாட்டு, காதல், நட்பு, அரசியல், கொண்டாட்டம் என ஜனரஞ்சகமான படமாக உருவாகியிருக்கும் படம்தான் ‘புளூஸ்டார்’.

இன்றைய காலகட்டத்தில் இந்தியாவில் கிரிக்கெட் எல்லோருக்கும் தெரிந்த விளையாட்டாகவும் , பிடித்தமான விளையாட்டாகவும் மாறிவருகிறது. சிற்றூர்கள் முதல் குக்கிராமங்கள்வரை கிரிக்கெட் என்பது இளைஞர்கள் மத்தியில் வெகு பிரபலம்.

அசோக் செல்வன்,  சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பாண்டியராஜன் மூவரும் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே நன்றாக கிரிக்கெட் விளையாடக் கூடியவர்களாக இருந்தது படத்துக்கு பெரும் பலம்.

இந்தப் படம் இளைஞர்களுக்கு ரொம்ப பிடிக்கும். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இப்போது விளையாடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள், என அனைவருக்கும் இந்தப் படம் நெருக்கமான உணர்வைத் தரக் கூடிய படமாக இருக்கும்.

படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவருமே அரக்கோணம் ஊர்க்காரர்களாகவே மாறிவிட்டார்கள்.

படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது, கோவிந்த் வசந்தா பாடல்கள மட்டுமல்ல, பின்னணி இசையையும் அற்புதமாக அமைத்திருக்கிறார்.

படத்தின் ஒளிப்பதிவாளர் தமிழ் அழகன் இந்தப் படத்திற்கு கடுமையாக உழைத்திருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டை சுற்றி கதை இருப்பதால் ஒளிப்பதிவுக்கென்று மெனக்கெட்டிருக்கிறார். இளைஞர்கள், குடும்பங்கள் என எல்லோருக்கும் இந்தப் படம் பிடிக்கும்..” என்றார்.

வரும் ஜனவரி 25-ம் தேதியன்று இத்திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.  சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்தின் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் இந்தப் படத்தை வெளியிடுகிறார்.

Our Score