ஜே.கே. பிலிம் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.சி.பிரபாத் தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘பில்லா பாண்டி’.
இந்தப் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நாயகனாக நடித்திருக்கிறார். ‘மேயாத மான்’ இந்துஜா, சாந்தினி இருவரும் கதாநாயகிகளாக நடித்திருக்கும் இப்படத்தில் தயாரிப்பாளர் K.C.பிரபாத்தும் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். நடிகர் சூரி கெஸ்ட் ரோலிலும், சிறப்பு தோற்றத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர்.
மேலும் தம்பி ராமையா, சரவண சக்தி, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலி முருகன், சௌந்தர், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P மிதுன் சக்ரவர்த்தி உள்பட பலர் நடிக்கின்றனர்.
தயாரிப்பு – K.C.பிரபாத், இயக்கம் – ராஜ் சேதுபதி, கதை, திரைக்கதை, வசனம் – MMS மூர்த்தி, ஒளிப்பதிவு – ஜீவன், இசை – இளையவன், படத் தொகுப்பு – ராஜா முகம்மது, கலை – மேட்டூர் சௌந்தர், நடனம் – கல்யாண், விஜி, சாண்டி, சண்டை பயிற்சி – சக்தி சரவணன், பாடல்கள் – கவிக்குமார், தணிக்கொடி, மீனாட்சி சுந்தரம், தயாரிப்பு நிர்வாகம் – தம்பி பூபதி, மக்கள் தொடர்பு – நிகில்.
இந்த ‘பில்லா பாண்டி’ படத்தின் கதையின் களம் ‘அனைத்தலப்பட்டி’ எனும் ஊர். ஊரின் பெயரிலேயே ‘தல’ இருப்பதாலோ என்னவோ, அந்த ஊரில் நடிகர் அஜித்திற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாம். நாயகன் R.K.சுரேஷும் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும், முக்கிய வேடத்தில் நடிப்பவருமான K.C.பிரபாத்தும் அஜித்தின் தீவிர ரசிகராம்.
மேலும் இப்படத்தில் நடிகர் அஜித்தின் புகழ் பாடும் ‘எங்க குல தங்கம்’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் K.C.பிரபாத், இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
“நடிகர் அஜித்தின் அருமை பெருமைகளையும், அவரது ரசிகர்களின் பண்புகளையும், தன்னார்வ தொண்டுகளையும் கூறும்விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘பில்லா பாண்டி’ படம் தீபாவளி அன்று திரைக்கு வரவுள்ளதாக…” தயாரிப்பாளர் K.C.பிரபாத் கூறினார்.