மலையாளப் படவுலகில் இது கல்யாண சீஸன் போலிருக்கிறது. ஆன் அகஸ்டின், மீரா ஜாஸ்மினுக்கு அடுத்து பாவனாவும் கல்யாணப் பொண்ணாகப் போகிறார்.
தமிழில் மிஷ்கினின் முதல் படமான ‘சித்திரம் பேசுதடி’யில்தான் இந்த பாவனாவும் தமிழுக்கு அறிமுகமானார். இதன் பின்பு ‘கிழக்கு கடற்கரைச் சாலை’, ‘வெயில்’, ‘கூடல்நகர்’, ‘ஆர்யா’, ‘ராமேஸ்வரம்’, ‘வாழ்த்துகள்’, ‘தீபாவளி’, ‘ஜெயம்கொண்டான்’, ‘அசல்’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.
இதற்கடுத்து மீண்டும் தமிழ் பக்கமே வராமல் மலையாளம், மற்றும் கன்னடப் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். 2012-ம் ஆண்டு ‘ரோமியோ’ என்ற கன்னடப் படத்தில் நடிக்கச் சென்ற பாவனாவுக்கு தயாரிப்பாளரான நவீன் மீது காதல் பிறந்ததாம்.
மூடி வைத்திருந்த இந்தக் காதலை இப்போதுதான் சில நாட்களுக்கு முன்னால் மீடியாக்களிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார். “நிச்சயம் நான் ஓடிப் போய் கல்யாணம் செய்ய மாட்டேன். எல்லார் முன்னாடியும், உங்க ஆசீர்வாதத்தோடதான் என் கல்யாணம் நடக்கும்.. காத்திருங்க..” என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்.
அநேகமா இந்த வருஷமே பாவனாவுக்கு டும்டும்டும் கொட்டலாம்..!