full screen background image

தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா

தனது பிறந்த நாளை வித்தியாசமாகக் கொண்டாடிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா

‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவிற்கு இன்றைக்கு 80-வது பிறந்த தினம். அதையொட்டி இன்று காலையில் இருந்தே தமிழ்ச் சினிமா துறையைச் சேர்ந்த பல முக்கிய நடிகர், நடிகைகள் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி அவரை வாழ்த்தினார்கள்.

கொஞ்சம் வித்தியாசமாக பாரதிராஜாவை வாழ்த்த நினைத்த இயக்குநர் லிங்குசாமி தான் தற்போது இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்புத் தளத்திற்கு பாரதிராஜாவை அழைத்து வந்தார்.

அங்கே நடந்த படப்பிடிப்பை ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா பார்வையிட்டார்.  படம் உருவாகும்விதத்தைப் பார்த்து இயக்குநர் N.லிங்குசாமியையும் படக் குழுவினரையும் பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் பாரதிராஜா.

மேலும் அதே படப்பிடிப்புத் தளத்தில் தனது பிறந்த தினத்தையொட்டி கேக் வெட்டி கொண்டாடினார் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா.

Our Score