full screen background image

தனுஷுடன் நடிக்கவிருக்கும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்..!

தனுஷுடன் நடிக்கவிருக்கும் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ்..!

இயக்குநர் இமயம்’ பாரதிராஜா தற்போது படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். கடைசியாக ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்புவுடன் நடித்திருந்தார். தற்போது தனுஷுடன் நடிக்கப் போகிறார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தனுஷ்  நாயகனாக நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா நடிக்கவிருக்கிறாராம்.

மேலும், இதே படத்தில் பிரகாஷ்ராஜூம் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கப் போகிறாராம். இதனை அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனமே அறிவித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர் என்று இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடம் ஒன்றில் நித்யா மேனனும் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்கவிருக்கிறது.

Our Score