full screen background image

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் புதிய படம் ‘நான் நீ நாம்’..!

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் புதிய படம் ‘நான் நீ நாம்’..!

பரத், சந்தியா நடித்த ’காதல்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். இவரின் இயக்கத்தில் கடைசியாக ’வழக்கு எண் 18/9’ படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில் மீண்டும் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாலாஜி சக்திவேல் வழக்கு எண் 18/9’ படத்திற்கு பிறகு யார் இவர்கள்’, ‘ர ர ராஜசேகர்’ என இரு படங்களை இயக்கினார். பல்வேறு காரணங்களினால் இந்த இரண்டு படங்களும் இப்போதுவரையிலும் வெளியாகாமல் உள்ளன.

இதற்கிடையில் வெற்றி மாறனின் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற அசுரன்’ படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார் பாலாஜி சக்திவேல்.

இந்நிலையில் தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்துக்கு ‘நான் நீ நாம்’ என தலைப்பு வைத்துள்ளார்கள்.

இந்தப் படத்தில் வீரா, சாந்தினி,  அஷ்வந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தயாரிப்பு நிறுவனம் – ப்ளூ மூன் கிரியேஷன்ஸ், ஒளிப்பதிவு – சுரேஷ் குமார், இசை – ஜாவித் ரியாஸ், பாடல்கள் – யுகபாரதி, லலிதானந்த், கலை இயக்கம் – மயில், நடன இயக்கம் – சாண்டி, சண்டை இயக்கம் – மிராக்கிள் மைக்கேல், ஒலி வடிவமைப்பு – தபஸ் நாயக், ஒப்பனை – கணேசன், புகைப்படங்கள் – கார்த்திக், தயாரிப்பு மேலாளர் – அண்ணாமலை, விளம்பர வடிவமைப்பு – எஸ்.சிவக்குமார், மக்கள் தொடர்பு – நிகில், நிர்வாகத் தயாரிப்பு – கே.எஸ்.செந்தில்குமார், எழுத்து, இயக்கம் – பாலாஜி சக்திவேல்.

விரைவில் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  நடிகர் விஜய் சேதுபதி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.

Our Score