full screen background image

‘பீஸ்ட்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது..!

‘பீஸ்ட்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது..!

நடிகர் விஜய்யின் ‘பீஸ்ட்’ படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு  வரும் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் நெல்சனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘பீஸ்ட்’.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ஷைன் டாம் சாக்கோ, லில்லிபுத் பரூக்கி, அன்கூர் அஜீத் விகால், பிஜோர்ன் சுர்ரோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – நெல்சன் திலீப்குமார், இசை – அனிருத், ஒளிப்பதிவு – மனோஜ் பரமஹம்சா, படத் தொகுப்பு – ஆர்.நிர்மல், கலை இயக்கம் – டி.ஆர்.கே.கிரண், சண்டை இயக்கம் – அன்பறிவ் பிரதர்ஸ், பாடல்கள் – கு.கார்த்திக், நடன இயக்கம் – ஜானி, ஒலிக் கலவை – சுரேன், ஒலி வடிவமைப்பு – ஆர்.சுரேன், எஸ்.அழகியகூத்தன், உடைகள் வடிவமைப்பு – பல்வி சிங். வி.சாய். ஒப்பனை – பி.நாகராஜன், கிராபிக்ஸ் சூப்பர்வைஸர் – பிஜோய் அப்புதராஜ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமத், விளம்பர வடிவமைப்பு – கோபி பிரசன்னா, தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.ரமேஷ் குச்சரையர், இணை தயாரிப்பு – ஆர்.உதயகுமார், தயாரிப்பு – சன் பிக்சர்ஸ்.

இந்த ‘பீஸ்ட்’ படம் சமீபத்தில்தான் சென்சார் சான்றிதழ் பெற்றுள்ளது. சென்சாரில் U/A சான்றிதழ் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.

வரும் ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இந்தப் படம் வெளியாகும் என்று முன்னர் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் தென்னிந்திய சினிமாவே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்க்கும் ‘கே.ஜி.எஃப்.’ படத்தின் 2-ம் பாகமும் வெளியாகவுள்ளதால் பீஸ்ட் தள்ளிப் போகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக தற்போது ஒரு நாள் முன்னதாக அதாவது ஏப்ரல் 13-ம் தேதியே ‘பீஸ்ட்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ‘பீஸ்ட்’ மற்றும் ‘கே.ஜி.எஃப்.-2’ இரண்டு படங்களின் வசூலும் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பீஸ்ட் படத்திற்கு அதிகத் தியேட்டர்கள் கிடைத்தாலும் ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் எப்போதும் கிடைக்கும் தியேட்டர்கள் இந்த முறை கே.ஜி.எஃப்பின் வரவால் குறைக்கப்படும் என்றே தெரிகிறது.

Our Score