சென்ற மாதம் மலையாளம், தமிழ்ச் சினிமா ரசிகர்களை ஒரேசேர சோகத்தில் ஆழ்த்திய சுனாமி செய்தி நஸ்ரியாவின் திருமணச் செய்திதான்..
மிகுந்த அழகுடனும், சிறந்த நடிப்புத் திறமையுடனும் தமிழ்ச் சினிமாவுலகில் இருப்பவர் நஸ்ரியா. 20 வயதேயான நஸ்ரியா இன்னமும் ஒரு 10 வருடங்களாவது தமிழ்ச் சினிமாவில் கலக்கப் போகிறார் என்று நினைத்தவர்களின் நினைப்பில் ஒரு லாரி மண்ணையள்ளிப் போட்டுவிட்டு, மலையாள நடிகரும், தமிழ் ரசிகர்களுக்கும் பிடித்தமான இயக்குநருமான பாசிலின் மகனுமான நடிகர் பஹத் பாசிலை காதல் திருமணம் செய்யப் போவதாக அறிவித்தார் நஸ்ரியா..
அடுத்தடுத்து படங்கள் புக்காகும் சூழலில் நஸ்ரியாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.. ஆனாலும் திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமில்லையா..? வருத்தத்தை ஒளித்து வைத்துவிட்டு மனதார வாழ்த்தினார்கள்..!
இதோ நேற்று.. திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் நஸ்ரியா-பஹத் பாஸில் திருமண நிகழ்வு நடந்தேறியுள்ளது. திருமணம் வரும் ஆகஸ்டு 21-ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கவிருக்கிறது.. 24-ம் தேதி ஆலப்புழையில் வரவேற்பாம்..!
பல்லாண்டு வாழ்கவென்று மணமக்களை வாழ்த்துவோம்..