full screen background image

அரியர்ஸ் மாணவர்களின் கதையில் உருவாகும் ‘பி.ஈ. பார்’ படம்

அரியர்ஸ் மாணவர்களின் கதையில் உருவாகும் ‘பி.ஈ. பார்’ படம்

‘காவல் துறை உங்கள் நண்பன்’ படத்தை உருவாக்கிய படக் குழுவினர் தற்போது ‘ஃபிரண்ட்ஷிப் காமெடி’(FRI-COM) என்னும் புது வகை ஜானரில்  முதல்முறையாக ‘பி.ஈ. பார்’(B.E. BAR) திரைப்படத்தை உருவாக்குகிறார்கள்.

இந்த ‘பி.ஈ. பார்’ (B.E. BAR)  படத்தினை Absolute Pictures நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் மால்கம்,  BR Talkies Corporation மற்றும் White Moon Talkies ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறார். B.பாஸ்கரன், P.ராஜ பாண்டியன், மற்றும் சுரேஷ் ரவி ஆகியோர் இப்படத்தை  இணைந்து தயாரிக்கின்றனர்.

மோ’ மற்றும் ‘காவல்துறை உங்கள் நண்பன்’ ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களையும், விமர்சகர்களையும் கவர்ந்த சுரேஷ் ரவி இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார்.

மேலும் தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், ‘கல்லூரி’ வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் இணைந்து நடிக்கிறார்கள்.

இசை – விஷ்ணுஸ்ரீ K.S., ஆதித்யா & சூர்யா, படத் தொகுப்பு – வடிவேல் & விமல்ராஜ், கலை இயக்கம் – சிவராஜ், வசனம் – கல்லூரி வினோத், பாடல்கள் – ஞானகரவேல் & கானா பிரபா.

காவல்துறை உங்கள் நண்பன்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் R.D.M. இப்படத்தை இயக்குகிறார்.

‘காவல் துறை உங்கள் நண்பன்’ திரைப்படம்  அதன் தீவிரமான கருத்து, ஈர்க்கும் கதை அமைப்பு மற்றும் நடிகர்களின் அற்புத நடிப்பிற்காக  அனைவராலும் பெருமளவில்  பாராட்டப்பட்டது.

இநதக் குழுவின் முந்தைய திரைப்படம் நமது மனதை உலுக்கும் ஒரு பரபரப்பான கதைக் களத்தை கொண்டிருந்தது, ஆனால், இந்த இரண்டாவது படைப்பு, முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக ஃபிரண்ட்ஷிப் காமெடி’ என்னும் புது ஜானரில் உருவாகவுள்ளது.

இக்கதையின் மையம்  பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை  சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது, படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

Our Score