கே.வி.எஸ், திரைக்கூடம் தயாரித்திருக்கும் இந்த அழகின் பொம்மி படத்தில் விஜய் கைலாஷ் ஹீரோவாகவும், சன்விகா என்ற ஆயிஷா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஆனந்த், ஆதித்யா, சிங்கமுத்து, நெல்லை சிவா, பயில்வான் ரங்கநாதன், கிரேன் மனோகர், விஜய்கணேஷ், ஜெயமணி, திரைநீதி செல்வம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் விஜய் கைலாஷ். ஒளிப்பதிவு ஆர்.எச்.அசோக். இசை பவதாரணி. பாடல்களை பிறைசூடன், சிநேகன், இளைய கம்பன், ஜெயமுரசு ஆகியோர் எழுதியுள்ளனர். பின்னணி இசை மியூஸிஸ் ஸ்டார் பரணி. எடிட்டிங் லான்சி மோகன். தயாரிப்பு கவிதா விஜயகுமார்.
வழக்கம்போல சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான இயல்புடன் இருக்கிறது.. ஆனால் இசையும், பாடல்களும் காதுகளை ரீங்காரமிடுகிறது.. கிராமத்துப் பின்னணியில் காதலுக்கும் நட்புக்கும் இடையில் நடக்கும் பாசப்போராட்டத்தை மையக் கருவாக வைத்து எடுத்திருக்கிறார்கள்.