ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிப்பில் வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படம் இறுதிக்கட்டப் பணிகளை எட்டியுள்ளது..
ஷூட்டிங்கை முடித்துவிட்ட இயக்குநர் வசந்தபாலன் அடுத்தடுத்து பிரமோஷன் வேலைகளில் ஆர்வம் காட்டி வருகிறார். சித்தார்த், பிருத்விராஜ், வேதிகா, சந்தானம் நடித்திருக்கிறார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
சமீபத்தில்தான் இதன் டைட்டில் டிஸைனை வெளியிட்டார் வசந்தபாலன். பின்பு சில ஸ்டில்களும் வெளியாகியுள்ளன..
இப்போதைய சூழலில் வெள்ளித்திரையில் ஒரு மேடை நாடகத்தைக் காணும் வாய்ப்பு தமிழ்த் திரை ரசிகர்களுக்கு கிடைத்திருக்கிறது.
காலம் கடந்த பீரியட் டைப் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இப்படத்திற்கு கிடைத்துள்ளது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நாளை நடக்கவுள்ளது. இச்சந்திப்பில் காவியத்தலைவன் டீமுடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் கலந்து கொள்கிறாராம்.. மிக ஆவலுடன் காத்திருக்கிறோம்..!