full screen background image

தெலுங்கில் வெற்றி பெற்றிருக்கும் சுஜா வாரூணி..!

தெலுங்கில் வெற்றி பெற்றிருக்கும் சுஜா வாரூணி..!

பூரிப்பிலிருக்கிறார் நடிகை சுஜா வாருணி. அவர் கதாநாயகியாக நடித்த தெலுங்குப் படம் ‘ஆலிபாபா ஒக்கடெ தொங்கா’ மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஆந்திரா முழுக்க வரவேற்பைப் பெற்றுள்ளது படம். திரும்பிய பக்கமெல்லாம் போஸ்டர்கள். பிரமாண்டமான ஹோர்டிங்குகள் என தெலுங்கு தேசமெங்கும். சுஜா முகங்கள்தான். ஹைதராபாத்தின் முக்கிய இடங்களில் மட்டுமே 75 ‘ஹோர்டிங்’கள் என்றால் சுஜாவின் மனம் மஜாவில் திளைக்க வேண்டாமா… என்ன?

alibaba-okkade-donga-poster

பிரபல தெலுங்குலகின் மூத்த காமெடி நடிகர் அலி ஹீரோவாக நடித்திருக்கிறார். உடன் தணிகெல்ல பரணி, துவாஷி மோகன் நடித்திருக்கிறார்கள். சாய் ஸ்ரீகாந்த் இசையமைத்திருக்கிறார். போத்கெடே சிவாஜி தயாரிக்க பாணி பிரகாஷ் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படம் புல் அண்ட் புல் நகைச்சுவை கலந்த குடும்பப் படம்தானாம்.. தெலுங்கானா, சீமாந்திரா பிரச்சினையில் தியேட்டர்களுக்கு வரும் கூட்டம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும் நிலையில் மக்களுக்கு ஒரு எண்ட்டெர்டெயின்மெண்ட்டை இந்தப் படமே கொடுத்திருப்பதாக தெலுங்கு ரிப்போர்ட் சொல்கிறது..

alibaba-okkade-donga-1

அந்தப் பட அனுபவம் பற்றி சுஜா வாருணி என்ன கூறுகிறார்?

”இந்தப் படத்துக்கு முன் நான் நடித்த ‘குண்டலொ கோதாவிரி’ தெலுங்குப் படத்தில் எனக்கு முக்கியமான கேரக்டர். சந்தீப் என் ஜோடி. அந்தப் படம் எனக்கு நல்ல அடையாளமாக அமைந்தது. இப்போது நான் கதாநாயகியாக நடித்து இந்தப் படம் வெளிவந்துள்ளது… சின்ன ரோல் என்று சீப்பாகச் சொல்லிவிட வேண்டாம். முக்கியமான ரோல் என்று கூறலாம்.

alibaba_okkade_donga_3

படத்தின் கதாநாயகன் ஆலி. சீனியர் நடிகர். அந்தப் படத்தில் நான் நடித்தபோது பலரும் என்னைக் கேட்டார்கள். நீ போய் அவருடன் நடிக்கலாமா? ஒரு காமடியனுடன் முதன்முதலில் கதாநாயகியாக நடிக்கிறாயே.. என்றெல்லாம் குழப்பினார்கள். நான் கேள்விகளை பொறுமையாக எதிர்கொண்டேன். ஆனால் யாருடன் நடிப்பது என்பது எனக்கு பிரச்சினை இல்லை. நம் கேரக்டர் எப்படி என்று மட்டும்தான் பார்ப்பேன். அந்த விதத்தில் ‘ஆலிபாபா ஒக்கடெ தொங்கா’ அமைந்தது. அந்தப் படத்தை எனக்கு நடிக்க வாய்ப்புள்ள ஒன்றாக கருதினேன். நடித்தேன்.” என்கிறார்.

இந்தப் படம் வெளியான தியேட்டர்களுக்கு பிரமோஷனுக்காக  போன சுஜா தனக்குக் கிடைத்த வரவேற்பை எண்ணி பூரிக்கிறார்.

alibaba-okkade-donga-2

“முதன் முதலில் ஒரு ஹிரோயினாக நான் தோன்றும் காட்சிகளில் எனக்கு கிடைத்த கைதட்டல், விசில் வரவேற்பு சிலிர்ப்பாக இருந்தது. என்னை நேரில் பார்த்த ரசிகர்களின் பரபரப்பு, எனக்கு புது அனுபவம். ‘நீங்க அழகா இருக்கீங்க உங்க கலர் ரொம்ப அழகு என்றும் ஹோம்லியா இருக்கீங்க…’ என்று பெண்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு பாராட்டியது. ஜிவ்வென்று இருந்தது. அந்த புது அனுபவம் ரொம்பவே எனர்ஜியா இருந்தது. ரீசார்ஜ் ஆன உணர்வு எனக்கு. படத்துக்கான ப்ரமோஷனின்போது தெலுங்குத் திரையுலகினர் ‘அழகா இருக்கீங்க தெலுங்கும் பேசுறீங்க.. தொடர்ந்து  இங்கேயே நடியுங்கள்’ என்று வரவேற்றார்கள். வாழ்த்தினார்கள்…”

– சிரிக்கும் கண்களுடன் கூறுகிறார் சுஜா.

இதுக்குத்தானே ஆசைப்பட்டீங்க சுஜா..?

Our Score