full screen background image

‘நவரசா’வில் ‘தைரியமான’ கதையில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா

‘நவரசா’வில் ‘தைரியமான’ கதையில் நாயகனாக நடித்திருக்கும் அதர்வா

தமிழ்ச் சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.  

விரைவில் வெளியாகவுள்ள நவரசா’ ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் கே.எம்.சர்ஜுன் இயக்கியுள்ள ‘துணிந்த பின்’  கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் ‘வெற்றி’ என்ற காவல்துறை அதிகாரியின் கதாப்பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.

இந்த ‘வெற்றி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி, நடிகர் அதர்வா முரளி பேசும்போது, “இயக்குநர் சர்ஜுன் இந்தப் படத்தின் திரைக்கதையைப் பற்றி விவரிக்கும்போது, எந்த உணர்வை பற்றிய கதையை  சொல்லப் போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.

 

இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின்  உச்சிக்கு சென்றது.  ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரி(Special Task Force officer) கேரக்டரில் நடிக்கப் போறீங்க என்று இயக்குநர் கூறியபோது  ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன்.

இந்தப் படம்  எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர்  சர்ஜுன் உடன் பணி புரிந்தது  மற்றும்  வெற்றி என்ற கதாப்பாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான  அனுபவமாக இருந்தது…” என்றார்.

 
Our Score