full screen background image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘பூமிகா’ திரைப்படம் விஜய் டிவியில் வெளியாகிறது..!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘பூமிகா’ திரைப்படம் விஜய் டிவியில் வெளியாகிறது..!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள  ‘பூமிகா’ திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி மதியம் 3 மணிக்கு வெளியாகிறது.

கார்த்திகேயன் சந்தானம், சுதன் சுந்தரம் மற்றும் ஜெயராம் ஆகியோர் Stone Bench Films மற்றும் Passion Studios சார்பில் தயாரிப்பில் பூமிகா திரைப்படத்தை தயாரித்துள்ளார்கள் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை வழங்குகிறார்.

இந்த பூமிகா’ திரைப்படத்தில்  நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். பாவல் நவகீதன் மற்றும் மிகவும் பல திறமையான புதுமுகங்கள் உட்பட ஒரு பெரிய நட்சத்திரக் குழு படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த Roberto Zazzara (ஒளிப்பதிவாளர்), பிருத்வி சந்திரசேகர் (இசை), ஆனந்த் ஜெரால்டின் (எடிட்டர்), டான் அசோக் (ஸ்டண்ட்), மோகன் (கலை), ராஜா கிருஷ்ணன் MR (ஒலி கலவை),  Sync Cinema (ஒலி வடிவமைப்பு), Thomas Kurian (Sync Sound Recordist), மனு ஆனந்த்  & ஷாஸ் அஹமத் (Murals & 2D Animations), பாலாஜி கோபால் (கலரிஸ்ட்), ஜெயலட்சுமி சுந்தரேசன் (உடைகள்), வினோத் சுகுமாரன் & ராம் பாபு (ஒப்பனை), iGene (VFX), தேவா சத்யா (VFX ஆலோசகர்), சுரேஷ் சந்திரா & ரேகா (மக்கள் தொடர்பு ), Design Point (விளம்பர வடிவமைப்புகள்), D ரமேஷ் குச்சிராயர் (தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்), செந்தில் முருகன் (மார்க்கெட்டிங் ஹெட்), பவன் நரேந்திரா (இணை தயாரிப்பாளர்), எம் அசோக் நாராயணன் (நிர்வாக தயாரிப்பாளர்), கல் ராமன் , S. சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியம் (இணை தயாரிப்பாளர்கள்) ஆகியோர் பணியற்றியுள்ளனர்.

இயக்குநர் ரதீந்திரன் R.பிரசாத் இயக்கியுள்ள இந்த பூமிகா’ திரைப்படம் ஒரு அற்புதமான திகில் திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது.

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் இப்படம் வெளியாவது குறித்து இயக்குநர் பேசும்போது, “இன்றைய காலகட்டத்தில் அதிகளவில் மக்களை  சென்றடையும் தளத்தில் திரைப்படத்தை வெளியிடுவது மிக முக்கியம். ஒரு படம் அதிக ரசிகர்களை சென்றடைவதே படைப்பாளியின் இறுதி நோக்கமாகும். விஜய் டிவி பிரீமியர் மூலம் நிச்சயம் எண்ணற்ற மக்களை இப்படம் சென்றடையும்.

ஐஸ்வர்யா ராஜேஷ் முதலான, நட்சத்திர நடிகர்களின் நடிப்பால், அற்புதமான படைப்பாக உருவாகியுள்ள,  இந்தப் படத்தினை கண்டிப்பாக ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.

Our Score