நடிகர் தனுஷின் நடிப்பில் இயக்குநர் வெற்றி மாறன் இயக்கிய ‘அசுரன்’ திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றிருந்தது.
சமீப ஆண்டுகளில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையையும் இத்திரைப்படம் பெற்றது. 2019-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் இந்தப் படமே பெற்றிருந்தது. சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தனுஷுக்கு இந்தப் படம் பெற்றுத் தந்தது.
மேலும் அந்த வருடத்திய பல்வேறு நிறுவனங்கள் வழங்கிய சினிமா விருதுகளையும் இத்திரைப்படம்தான் அதிகமாகக் கைப்பற்றியது. இப்போது மேலும் கூடுதலாக மேலும் பல விருதுகளை அள்ளப் போகிறது இத்திரைப்படம்.
சைமா(SIMAA) எனப்படும் தென்னிந்திய திரைப்படங்களுக்கான சர்வதேச விருதுகளுக்கு இத்திரைப்படம் 10 பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி, சிறந்த அறிமுக நடிகர் ஆகிய 10 பிரிவுகளில் இத்திரைப்படம் தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நிச்சயமாக இதில் 8 விருதுகளை இத்திரைப்படம் அள்ளப் போவது உறுதி..!