full screen background image

சினிமா பி.ஆர்.ஓ. சங்கத் தலைவராக டைமண்ட் பாபு தேர்வு..!

சினிமா பி.ஆர்.ஓ. சங்கத் தலைவராக டைமண்ட் பாபு தேர்வு..!

தமிழ்ச் சினிமாவில் ‘பி.ஆர்.ஓ.க்கள்’ என்றழைக்கப்படும் பத்திரிகை தொடர்பாளர்களின் சங்கமான ‘தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்க’த்தின் தலைவராக டைமண்ட் பாபு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் சங்கத்திற்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை இந்தச் சங்கத்திற்குத் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவுக்கு வருவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் இரண்டு அணிகள் போட்டியிட்டனர். முன்னாள் தலைவரான டைமண்ட் பாபு தலைமையில் ஒரு அணியும், முன்னாள் செயலாளர் ஜான் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரையிலும் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில்  நடைபெற்றது.

வாக்குப் பதிவு முடிந்த உடனேயே ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதன்படி சங்கத்தின் புதிய தலைவராக டைமண்ட் பாபு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

சங்கத்தின் புதிய செயலாளராக யுவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் புதிய பொருளாளராக குமரேசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சங்கத்தின் புதிய துணைத் தலைவர்களாக வி.கே.சுந்தரும், கோவிந்தராஜூம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் புதிய இணைச் செயலாளர்களாக முத்துராமலிங்கமும், கணேஷ்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்களாக, ராஜேஷ், இனியன் ராஜன், ‘கிளாமர்’ சத்யா, ‘திரை நீதி’ செல்வம், சாவித்திரி, வெங்கட், தர்மா, புவன், ஆறுமுகம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

 
 
Our Score