full screen background image

“அசோக் செல்வனைப் பார்த்தால் பொறாமையா இருக்கு..” – நடிகர் சதீஷின் பொறாமைப் பேச்சு..!

“அசோக் செல்வனைப் பார்த்தால் பொறாமையா இருக்கு..” – நடிகர் சதீஷின் பொறாமைப் பேச்சு..!

Trident Arts நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குர் சுமந்த் ராதாகிருஷ்ணனின் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், முனீஸ்காந்த் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ஹாஸ்டல்’.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் வரும் ஏப்ரல் 28-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதையொட்டி, படக் குழுவினர் நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.  

நடிகர் சதீஷ் பேசும்போது, “ரொம்ப ஜாலியா வேலை பார்த்த படம் இது. எல்லோரும் வாழ்க்கையில் அனுபவித்த கதைதான். நான் ஹாஸ்டலில் படித்ததில்லை. ஆனால் நண்பனின் ஹாஸ்டல் போய் தங்கியிருக்கிறேன். அந்த நினைவுகளை இந்தப் படம் தூண்டிவிடும்.

அசோக் செல்வன் நடித்த மன்மத லீலை’ படம் சமீபத்தில்தான் வெளியானது. இப்போது அடுத்தப் படத்தோடு வந்துவிட்டார். அவர் மூன்று நாயகிகளோடு நெருக்கமாக நடித்ததைப் பார்க்க, பார்க்க நமக்கு பொறாமையாக இருக்கிறது. பிரியா என்னுடைய நெருங்கிய தோழியாக மாறிவிட்டார். நாசர் சார் மகளிர் மட்டும் படத்திற்கு பிறகு நல்ல காமெடியோடு இந்தப் படத்தில்தான் நடித்துள்ளார். சுமந்த் முன்னதாகவே எனக்கு நண்பர். படத்தை நன்றாக எடுத்துள்ளார். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்..” என்றார்.  

 
Our Score