full screen background image

‘சவுகார்பேட்டை’ நவம்பர் 27-ல் ரிலீஸ்..!

‘சவுகார்பேட்டை’ நவம்பர் 27-ல் ரிலீஸ்..!

ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சவுகார்பேட்டை’ திரைப்படம், வரும் நவம்பர் 27-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ படங்களை தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரித்திருக்கும் படம் ‘சவுகார்பேட்டை.’

இந்த படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமிராய் மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘தலைவாசல்’ விஜய், ரேகா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இசை – ஜான் பீட்டர், ஒளிப்பதிவு – சீனிவாசரெட்டி, பாடல்கள் – நா.முத்துக்குமார், விவேகா, கலை – சுசி தேவராஜ், நடனம் – தினேஷ், ஸ்டண்ட் – கனல் கண்ணன், எடிட்டிங் – எலிசா, எழுத்து, இயக்கம்-வி.சி.வடிவுடையான்.

படம் பற்றி இயக்குநர் வி.சி.வடிவுடையான் பேசும்போது, “இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் இரண்டு வேடமேற்கிறார். அதில் ஒரு கதாப்பாத்திரம் மந்திரவாதி. லட்சுமிராய் பேய் பிடித்து தானும் ஆடி மற்றவர்களையும் ஆட்டிப் படைக்கும் ‘மாயா’ என்ற திகிலான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதுவரையிலும் வந்த பேய்ப் படங்களுக்கே இதுதான் தலையாய பேய்ப் படமாக இருக்கும். படம் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

படம் வரும் நவம்பர் 27, வெள்ளிக்கிழமையன்று தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது…” என்றார்.

Our Score