புதுமுகங்கள் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கள்-41’ திரைப்படம்

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கள்-41’ திரைப்படம்

ஜி.எம்.கிரியேட்டர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் எம்.கோவிந்தசாமி தயாரித்துள்ள திரைப்படம் ‘ஆர்ட்டிக்கள்-41’.

இந்தப் படத்தில் பாலு, சிந்து, சூரியமூர்த்தி, சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

அரசாங்க வேலைக்கு  கடன் வாங்கி பணத்தை கட்டும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கரு.

இந்தப் படத்தை இயக்குநர் எஸ்.ஜி.சிவகுமார் இயக்கியுள்ளார்.

ஷாஜகான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தின்  ஒரு பாடல் சமீபத்தில் வெளியானது.

சமூக அவலங்களை எடுத்துரைக்கும் “சர்க்காரு வேலதான்” என்ற பாடலை கேட்ட சீமான் அவர்கள் பாராட்டி இந்த பாடலை  வெளியிட்டுள்ளார்.

பல சர்வதேச விருதுகளை வென்றுள்ள இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.