‘அரண்மனை-3’ நவராத்திரி விடுமுறையில் வெளியாகிறது

‘அரண்மனை-3’ நவராத்திரி விடுமுறையில் வெளியாகிறது

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடித்திருக்கும் ‘அரண்மனை-3’ படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி நவராத்திரி விடுமுறையில் வெளியாகிறது.

இந்த அரண்மனை-3’ படத்தை அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பு தயாரித்துள்ளார்.  

குடும்பங்கள் சிரித்து கொண்டாடும் ஜனரஞ்சகமான படமான இப்படத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர்.சி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, ஆண்ட்ரியா, மனோபாலா, சம்பத், சாக்‌ஷி அகர்வால், மதுசூதன ராவ், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இயக்கம் – சுந்தர்.சி, தயாரிப்பு நிறுவனம் – அவ்னி சினிமேக்ஸ், தயாரிப்பாளர் – குஷ்பு  சுந்தர், ஒளிப்பதிவு – U.K.செந்தில்குமார், இசை – C.சத்யா,  படத் தொகுப்பு – ஃபென்னி ஆலிவர், கலை இயக்கம் – குருராஜ், சண்டை பயிற்சி – பீட்டர் ஹெய்ன், தளபதி தினேஷ், பிரதீப் தினேஷ், நடனம் – பிருந்தா, தினேஷ், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹ்மத்.

இந்தப் படம் சமீபத்தில்தான் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் இத்திரைப்படம் வரும் அக்டோபர் 14-ம் தேதி நவராத்திரி பண்டிகையொட்டிய விடுமுறை தினத்தில் வெளியாகவிருப்பதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள்.

இந்தப் படம் தயாராகி கிட்டத்தட்ட 1 வருட காலம் ஆன பின்பும் நிச்சயமாக தியேட்டரில்தான் படத்தை வெளியிடுவோம் என்று காத்திருந்து இப்போது படத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இதற்காக தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் சுந்தர் சி.க்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Our Score