“நான் இல்லாமல் ஷூட்டிங் போகக் கூடாது” – சுந்தர்.சி.க்கு உத்தரவிட்ட ஹன்ஸிகா..!

“நான் இல்லாமல் ஷூட்டிங் போகக் கூடாது” – சுந்தர்.சி.க்கு உத்தரவிட்ட ஹன்ஸிகா..!

'அரண்மனை-2' படத்தில் ஹன்ஸிகாதான் முதலில் புக் செய்யப்பட்டார் என்று சுந்தர்.சி சொல்லும்போது ஹன்ஸிகா இது பற்றிச் சொல்லாமல் இருப்பாரா..?

இந்தப் படத்தில் நடித்தது பற்றி நடிகை ஹன்சிகா கூறுகையில், "சுந்தர்.சி சார் எப்ப படம் எடுத்தாலும் சரி.., கதை கேட்காமல் கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு அவர் டைரக்ஷன் மீது எனக்கு ஒரு குருட்டுத்தனமான நம்பிக்கை இருக்கு.

அந்த நம்பிகையில்தான் ‘அரண்மனை-2’ எடுக்கப் போறேன்னு அவர் சொன்னபோது ‘இது என்னோட படம்.. நான் இல்லாமல் ஷூட்டிங் போகக் கூடாது’ன்னு உரிமையாக சொன்னேன்.

இதில் எனக்கு ‘மாயா..’ங்கற பாட்டு இருக்கு. வெரி நைஸ் சாங். சுந்தர் சாருடன் இது எனக்கு 4-வது படம். இதுவும் நிச்சயமா சூப்பர் ஹிட் ஆகும்..” என்றார் நம்பிக்கையுடன்.!