திகிலைக் கிளப்ப நவம்பர் 3-ம் தேதி வெளிவருகிறாள் ‘அவள்’

திகிலைக் கிளப்ப நவம்பர் 3-ம் தேதி வெளிவருகிறாள் ‘அவள்’

'Viacom18 Motion Pictures' நிறுவனமும் 'Etaki Entertainment' நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திகில் படம் ‘அவள்’.

நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து நடிகர் சித்தார்த்தும் எழுதியுள்ளார். நடிகர் அதுல் குல்கர்னி இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிரிஷ் இசையில், ஷ்ரேயஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவில் இந்த 'அவள்' திரைப்படம் உருவாகியுள்ளது.

உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. அந்த வரிசையில் தயாராகியிருக்கும் இப்படத்தின்  ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கான ஆவலும்  பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ட்ரைலரின் காட்சியமைப்பு, இசை ஆகியவை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் அளவிற்கு உள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

இந்தப் படம் வரும் நவம்பர் 3-ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல படங்களை ரிலீஸ் செய்து ஹிட் மேல் ஹிட் கொடுத்து சமீபத்தில் 'விக்ரம் வேதா' என்ற மாபெரும் வெற்றி படத்தை தந்த 'Trident Arts' நிறுவனம் 'அவள்' படத்தை ரிலீஸ் செய்யவுள்ளது.

இது குறித்து 'Trident Arts' நிறுவனத்தின் ரவீந்திரன் பேசுகையில், ''தியேட்டருக்கு வரவிருக்கும் ரசிகர்களை உண்மையாகவே பயமுறுத்தி நடுங்க வைக்குப் போகும் படம் 'அவள்' என்று உறுதியாகச் சொல்லலாம். ஹாலிவுட் ஹாரர் படங்களுக்கு இணையாக இந்த 'அவள்' படம் உருவாக்கப்பட்டுள்ளது என உறுதியாக சொல்கிறேன். வரும் நவம்பர் 3-ம் தேதி ரிலீஸாகவுள்ள 'அவள்'  தமிழ் சினிமா ரசிகர்களை திகிலில் உறைய வைப்பது நிச்சயம்..” என்கிறார் நம்பிக்கையோடு..!