கேரளத்து ஒளிப்பதிவாளர், இயக்குநரான சந்தோஷ்சிவனை நாம் துரத்தினாலும் அவர் நம்மைவிட மாட்டார் போலிருக்கிறது..!
அவர் ஹீரோவாகவும், ராதாவின் மகள் கார்த்திகா ஹீரோயினாகவும் நடித்த ‘மகரமஞ்சு’ என்ற மலையாளப் படம் இப்போது தமிழில் ‘அப்சரஸ்’ என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டு வரும் 23-ம் தேதி தமிழ்நாட்டில் வெளிவர இருக்கிறது..!
கார்த்திகா நடித்த முதல் மலையாளப் படம் இதுதான்.. இவர் மட்டுமல்ல.. தமிழுக்கு அறிமுகமானவர்கள் இன்னும் சிலரும் படத்தில் இருக்கிறார்கள். நித்யா மேனன், மல்லிகா கபூர், பூர்ணா ஆகியோரும் படத்தில் உண்டு. ஒளிப்பதிவு மது அம்பட். இசை, ரமேஷ் நாராயண். எடிட்டிங், மகேஷ் நாராயணன். எழுதி இயக்கியவர் லெனின் ராஜேந்திரன்.
2011 செப்டம்பர் 30-ம் தேதியன்று கேரளாவில் ரிலீஸானது.. சிறந்த மேக்கிங் என்ற சினிமா விமர்சகர்களால் பெயர் பெற்றது.. கார்த்திகாவுக்கு சிறந்த புதுமுக நடிகைக்கான கேரள மாநில அரசின் விருதும், பிலிம்பேர் விருதும் கிடைத்தது..
கேரளத்தின் புகழ் பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் வாழ்க்கைக் கதைதான் படமே.. வரும் 23-ம் தேதியன்று கோச்சடையான் படத்தோடு மோதப் போகிறாள் இந்த ‘அப்சரஸ்’.. என்ன நெஞ்சழுத்தம் பாருங்க இவங்களுக்கு..?
எப்படியும் 10 அல்லது 20 தியேட்டர்கள்தான் கிடைக்கும்.. அதையும் இந்த நேரத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் போலும்..!
கோச்சடையானுக்கு சரியான போட்டிதான்..!