தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இன்று வெளியிட்டுள்ள ஒருஅறிக்கை :
“அனைத்துத் தமிழ்த் திரைப்படங்களின் பாடல்கள், கிளிப்பிங்ஸ், டிரெயிலர் ஆகியவற்றை உள்ளூர் தனியார் கேபிள் டிவியில் ஒளிபரப்பும் உரிமையை நாங்கள் எந்த ஒரு நிறுவனத்திற்கும் இதுவரையிலும் வழங்கவில்லை. இதை மீறி சில நிறுவனங்கள் நாங்களும் உரிமம் பெற்றுள்ளோம் என்று கூறி உண்மைக்குப் புறம்பாக உள்ளூர் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடம் பணம் வசூலிப்பதாக அறிகிறோம்.
இவ்வாறு செயல்படுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உரிமம் பெறாமல் ஒளிபரப்பும் உள்ளூர், தனியார் தொலைக்காட்சிகள் மீதும் சட்டப்பட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதையும் இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
நமது சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைத்துத் தயாரிப்பிலும் வெளி வந்த, வெளிவர இருக்கும் பழைய, புதியத் திரைப்படங்களின் பாடல்கள், கிளிப்பிங்ஸ், நகைச்சுவை, சிறப்புக் காட்சிகள், டிரெயிலர்கள் மற்றும் திரைப்பட பூஜைகள், இசை வெளியீட்டு விழாக்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்தில் இயங்கி வரும் உள்ளூர் மற்றும் கேபிள் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பும் உரிமை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் மட்டுமே உள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் முறையாக உள்ளூர் மற்றும் தனியார் தொலைக்காட்சிகள் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உரிமம் பெற்ற பின்னரே ஒளிபரப்ப வேண்டும் என்றும் மேலும் இது குறித்த விவரங்களுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை கீழ்க்காணும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் வேண்டுகிறோம்…”
தொலைபேசி எண் : 044-28295306