இன்று காலை சாலிகிராமம் மோகன் ஸ்டூடியோவில் லஷ்மி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் புதிய படத்தில் நடிப்பதற்காக வந்த நடிகை அஞ்சலி பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.
அங்கு அவர் அளித்த பேட்டி இது :
இந்தப் படத்தில் இணைந்தது பற்றி..!
ஒரு வருடத்திற்கு பின் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரியாகும் போது அது நல்ல கதையாக இருக்க வேண்டும் என காத்திருந்தேன். சுராஜ் சார் கூறிய கதை எனக்கு பிடித்திருந்தது. இது முழு நீள காமெடி படம். முதல் முறையாக முழு நீள காமெடி ரோலில் நடிக்கிறேன். வில்லேஜ் ரோல். அதனால்தான் இந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டேன்.
நீங்கள் மீண்டும் நடிக்க கூடாது என சிலர் தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறதே?
அப்படி எனக்கு யாரும் தடை போடவில்லை. அப்படி தடை போட்டிருந்தால், எப்படி நடிக்க முடியும்? நான்தான் இப்போது நடிக்கிறேனே…?
உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டதா சொல்றாங்களே..?
அப்படி எதுவும் கிடையாது. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை. எனக்கு கல்யாணம் ஆகி விட்டதாக சிலர் கூறுகின்றனர். எப்போது ஆனது என்று எனக்கே தெரியவில்லை. அவ்வாறு வதந்தி பரப்புபவர்களிடம் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா இல்லையா என்று ஒவ்வொருவரிடமாக போய் தாலியை காட்டிக் கொண்டிருக்க முடியாது. என் வேலையை நான் பார்க்கிறேன்.
மிரட்டல்கள் இருப்பதால் மீண்டும் நடிக்க உங்களுக்கு பயமாக இருக்கா?
எனக்கு எந்த பயமும் கிடையாது. எனக்கு எனது ப்ரண்ட்ஸ், சினிமா நிர்வாகத்தினர் துணையாக இருக்கின்றனர். தமிழில் இன்னும் நிறைய படம் நடிக்க வேண்டும் என நினைக்கிறேன். எனக்கு பாதுகாப்பு கொடுக்கிற அளவிற்கு நிலை கிடையாது.
இப்போது என்னென்ன படங்களில் நடிக்கிறீர்கள்?
தெலுங்கில் நான் நடித்த படம் ஒன்று ரிலீசாக போகிறது. தமிழில் சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களுக்கு பின்னால் யாரோ உதவிகள் செய்வதாகக் கூறப்படுகிறதே..? யார் அவர்..?
எனக்கு மொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் சப்போர்ட்டாக உள்ளது.
டைரக்டர் களஞ்சியம் உங்களை நடிக்க கூடாது என்று சொல்லி இருக்கிறாரே..? அவர் இயக்கத்தில் மீண்டும் நடிப்பீர்களா..?
நடிக்க முடியாது என்று கூறியதால்தானே பிரச்னையே. இது பற்றிய வழக்கு கோர்ட்டில் இருப்பதால் அதிகம் பேச விரும்பவில்லை.
தெலுங்கு நடிகர் ஒருவர் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கூறப்படுகிறதே…?
அதெல்லாம் வெறும் வதந்தி. எனக்கு யாரும் அடைக்கலம் கொடுக்கவில்லை.