full screen background image

நடிகர் ஜெய்யின் கல்யாண ராசி..!

நடிகர் ஜெய்யின் கல்யாண ராசி..!

நடிகர் ஜெய்க்கும் கல்யாணத்துக்கும் செம ராசி.. ஆனால் இது அவருக்கில்லை. அவருடன் ஜோடி சேரும் நடிகைகளுக்கு மட்டும்..! இதை அவரே ‘குமுதம்’ பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார்..

“நமக்கு மட்டும் என்ன ராசியோ தெரியல பிரதர்.. என்னோட சேர்ந்து நடிச்சாலே ஹீரோயின்லாம் ஒண்ணு கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிடறாங்க. இல்லைன்னா தமிழ்நாட்டைவிட்டே போயிடறாங்க..

நஸ்ரியாகூட நடிச்சேன். அவங்களுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆயிருச்சு. அஞ்சலியை பார்த்தீங்கன்னா ஆளையே காணோம்.. இப்ப பாருங்க.. ஆண்ட்ரியாகூட சேர்த்து வைச்சு கிசுகிசு எழுத ஆரம்பிச்சிட்டாங்க.. முன்னாடியே அவங்ககிட்ட சொல்லி்டடேன். ‘என்னோட சேர்ந்து நடிச்சிட்டீங்கள்ல.. கன்பார்மா இந்த வருஷம் உங்களுக்குக் கல்யாணம் ஆகிடும். ஒண்ணு.. என்கூட கல்யாணம்.. இல்லைன்னா வேற யார்கூடயோ கல்யாணம் கட்டாயம் நடக்குதா இல்லையான்னு பாருங்க’ன்னு காமெடியா சொல்லி வைச்சிருக்கேன்.. விஜய் டிவி ரம்யாகூட லேசா பிரெண்ட்ஷிப் ஆரம்பிச்சது.. உடனே அவங்களும் கல்யாணமாகி செட்டில் ஆகிட்டாங்க. இப்ப திவ்யதர்ஷிணிகிட்ட பழகினேன்.. அவங்களுக்கும் கல்யாணமாயிருச்சு.. நம்ம ராசியே இதுதான் பிரதர்..” என்கிறார் ஜெய்.

அவர் வேறொரு கேள்விக்கு பதிலளிக்கையில், “சீக்கிரத்திலேயே நான் டாப் ஹீரோஸ் பட்டியல்ல முதல் அஞ்சு பேர்ல ஒருத்தனா வரணும்.. நான் இப்ப எந்த லிஸ்ட்ல இருக்கேன்னு எனக்கே தெரியலை.. ஒரே குழப்பமா இருக்கு.. ஆனா முக்கியமான ஹீரோக்கள் லிஸ்ட்ல இருக்கேன்னு மட்டும் தெரியும். ஓப்பனா சொன்னா தமிழ்ச் சினிமாவில் விஜய் அண்ணா இடத்தைப் பிடிக்கணும்..” என்று சொல்லியிருக்கிறார்..!

ஆசை இருக்க வேண்டியதுதான்.. ஆனா ஒரே ஜம்ப்ல ரிக்கார்டு பிரேக் செய்யணும்ன்னு நினைச்சா முடியுமா..?

Our Score