full screen background image

‘அனேகன்’ – விஜய் நடித்திருக்க வேண்டிய படமாம்..!

‘அனேகன்’ – விஜய் நடித்திருக்க வேண்டிய படமாம்..!

வரும் பிப்ரவரி 13-ம் தேதியன்று ரிலீஸாகவிருக்கும் ‘அனேகன்’ திரைப்படம் “இளைய தளபதி விஜய் நடித்திருக்க வேண்டிய படம்..” என்கிறார் அதன் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

இன்றைய ‘குமுதம்’ பத்திரிகையில் இது குறித்து பேட்டியளித்திருக்கிறார் இயக்குநர் கே.வி.ஆனந்த்.

அந்தப் பேட்டியில், “மாற்றான்’ முடிந்ததும், விஜய்க்காக சில தயாரிப்பாளர்கள் என்னிடம் கதை கேட்டார்கள். அப்போது உடனே என் கைவசம் கதை ஏதுமில்லை. என்னுடைய சுபாவம் எப்படின்னா… ஒரு கதை பிடித்து அதற்கு டயலாக், ஸ்கிரீன்பிளே எல்லாம் பக்காவா ரெடி பண்ணிய பிறகுதான் அந்தக் கதைக்கு யார் பொருந்துவார்கள் என்று பார்த்துச் சொல்வேன்.

அதேபோல இந்தக் கதையை பக்காவா ரெடி செய்துவிட்டு விஜய்யை சந்தித்து கதையைச் சொன்னேன். கதை அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. ‘ரொம்ப நல்ல லவ் சப்ஜெக்ட்டுதான். பண்ணலாம்.. ஆனால் ஒரு வாரம் முன்னாடி வந்திருந்தீங்கன்னா உடனே டேட்ஸ் கொடுத்திருப்பேன். இப்பத்தான் ஜில்லாவுக்கு கால்ஷீட் கொடுத்தேன். அது முடிந்தவுடனே கத்தி பண்றேன். அதுக்குப் பிறகு பண்ணலாம் என்றால் லேட்டாகும். சரி உங்களுக்கு எத்தனை நாள் வேண்டும்?’ என்று விஜய் கேட்டார். ‘எப்படியும் 124 நாட்கள் ஆகலாம்..’ என்றேன்.

மறுநாள் கூப்பிட்டு பேசும்போது ‘இரண்டு படங்களிலிருந்தும் 65 நாட்கள் அட்ஜஸ்ட் பண்ணித் தர முடியும். அதுக்குள்ள பண்ண வாய்ப்பு இருக்கான்னு பாருங்கள்?’ என்றார் விஜய். கதை மேல் அவருக்குள்ள ஈடுபாடு கண்டு மகிழ்ச்சியாக இருந்த்து. ஆனாலும் 124 நாட்களில் செய்தால் நல்லா சிறப்பாகச் செய்ய முடியும் என்று எடுத்துச் சொன்னதும், ‘சரி.. அடுத்து இன்னொரு நல்ல சப்ஜெக்ட்ல சந்திப்போம். படம் பண்ணுவோம்..’ என்று சொல்லியனுப்பினார்.

விஜய்க்கு ரொம்பப் பிடித்த இந்த சப்ஜெக்ட்டை தனுஷை சந்தித்து சொன்னதும் அவர் மற்ற படங்களின் தேதியை ஒதுக்கி உடனே கால்ஷீட் கொடுத்தார்…” என்று சொல்லியிருக்கிறார் கே.வி.ஆனந்த்.

Our Score