full screen background image

ZEE-5 ஓடிடி தளத்தின் புதிய இணையத் தொடர் ‘அனந்தம்’

ZEE-5 ஓடிடி தளத்தின் புதிய இணையத் தொடர் ‘அனந்தம்’

தற்போது தமிழகத்தில்  ஓடிடி பார்வையாளர்களின் முக்கிய தேர்வாக ஜீ-5 ஓடிடி தளம் விளங்குகிறது. இந்த ஜீ-5 தளத்தில் சமீபத்தில் வெளியான விலங்கு’ இணைய தொடர், ‘முதல் நீ முடிவும் நீ’ படம் உட்பட அனைத்தும் உலகளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், புதிதாக ‘அனந்தம்’ என்ற இணையத் தொடர் வெளியாகவுள்ளது.

ஹேப்பி யூனிகார்ன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் V.முரளிராமன் இந்தத் தொடரைத் தயாரித்துள்ளார்.

இந்தத் தொடரில் பிரகாஷ் ராஜ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார், மேலும் அரவிந்த் சுந்தர், சம்பத், விவேக் பிரசன்னா, வினோத் கிஷன், ஜான் விஜய், விவேக் ராஜ்கோபால், லட்சுமி கோபால்சாமி, இந்திரஜா, சம்யுக்தா, அஞ்சலி ராவ் மற்றும் மிர்னா மேனன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

திரைக்கதை – ப்ரியா.V, ராகவ் மிர்தாத், ப்ரீத்தா ஜெயராமன் & ரீமா ரவிச்சந்தர் | எழுத்தாளர் – பிரியா.V | வசனம் – ப்ரியா V & ராகவ் மிர்தாத் | ஒளிப்பதிவு – பகத் | தயாரிப்பு வடிவமைப்பாளர் – சூர்யா ராஜீவன் | இசை – A.S.ராம் | படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா.

இந்தத் தொடரை ‘கண்ட நாள் முதல்’ மற்றும் ‘கண்ணாமூச்சி ஏனடா’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் வி.பிரியா இயக்கியுள்ளார்.

இது 1964 – 2015-வரையிலும் ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த, உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணையத் தொடராகும்.

ஒரு குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் வீட்டை பல காலம் கழித்து பார்வையிடுவதில் இதன் கதை தொடங்குகிறது. அவர் ‘அனந்தம்’ என்று பெயரிடப்பட்ட தனது மூதாதையரின் வீட்டிற்கு மீண்டும் வருகை தருகிறார்.

அந்த வீட்டில் வாழ்ந்த தருணங்களின்,  ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என அனைத்தும் கலந்த நினைவுப் பயணம்தான் இந்தத் தொடரின் கதை.

இந்த ‘அனந்தம்’ தொடரின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. டீஸரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டு படக் குழுவினரை பெரிதும் பாராட்டினார்.

ஜீ-5 ஓடிடி தளத்தின் ஒரிஜினல் தொடரான இந்த ‘அனந்தம்’ இணையத் தொடர், வரும் ஏப்ரல் 22-ம் தேதியன்று ஜீ-5 தளத்தில் பிரத்தியேகமாக வெளியாகிறது…!

Our Score