full screen background image

நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ‘இயல்வது கரவேல்’..!

நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ‘இயல்வது கரவேல்’..!

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் இயல்வது கரவேல்’.

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி மாணவனாக நடித்த கதிர், இந்தப் படத்தில் முதன்மை நாயகனாக நடிக்கிறார். இவருடன் மாஸ்டர்’ மகேந்திரனும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  

குழந்தை நட்சத்திரமாக நம் அனைவருக்கும் அறிமுகமான யுவலக்ஷ்மி முதல் முறையாக இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில்  கரு.பழனியப்பன், ஆடுகளம்’ நரேன், ஸ்மைல் சேட்டை’ அன்புதாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

எழுத்து, இயக்கம் – எஸ்.எல்.எஸ்.ஹென்றி, தயாரிப்பு நிறுவனம் – எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ், தயாரிப்பாளர்கள் – டேனியல் கிறிஸ்டோபர், தென்னிலவன், இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – ஸ்ரீதர், கலை இயக்கம் – மாயப்பாண்டி, படத் தொகுப்பு  – தியாகு, மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்.

அறிமுக இயக்குநரான, எஸ்.எல்.எஸ்.ஹென்றி இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் இன்று நேற்று நாளை’ இயக்குர் ரவிக்குமார் மற்றும் அண்ணனுக்கு ஜே’ பட இயக்குர் ராஜ்குமாருடனும்  சினிமா பயின்ற அனுபவம் கொண்டவர்.

சென்னையின் பழமை வாய்ந்த கல்லூரியில் நடக்கும் காதல் மற்றும் மாணவர்களின் அரசியலை அடிப்படையாக கொண்டது இந்தப் படம். கல்லூரி மாணவர்கள் அரசியல் ஈடுபடுவது சரியா.. தவறா என்பது பற்றி இப்படம் பேசவுள்ளது.

மாஸ்டர் மகேந்திரனை இதுவரை பார்த்திராத ஒரு புதிய கோணத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கிறது படக் குழு.  இந்தப் படத்தில் கதிருக்கு, வில்லனாக ‘மாஸ்டர்’ மகேந்திரன் நடிக்கிறார்.  

இதில் ஆச்சரியம் என்னவென்றால் நிஜத்தில் கதிரும், ‘மாஸ்டர்’ மகேந்திரனும் திக் பிரண்ட்ஸ். இவர்கள் நிஜத்தில் எப்படிப்பட்ட நெருங்கிய நண்பர்கள் என்பது இவர்களுடன் பழகி வரும் அனைவருக்குமே தெரியும்.

இப்படி நிஜத்தில் நண்பர்களாக இருப்பவர்கள் திரையில் எதிரிகளாக மாறியிருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

Our Score